2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று: டிசம்பர் 04

S. Shivany   / 2021 ஜனவரி 04 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

1619 – 38 குடியேறிகள் வர்ஜீனியாவின் பெர்க்லியில் தரையிறங்கினர்.

1639 – ஜெரிமையா ஹொரொக்ஸ் முதன் முதலாக வெள்ளிக் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்வதை அவதானித்தார்.

1791 – உலகின் முதலாவது ஞாயிறு இதழ் தி அப்சர்வர் வெளிவந்தது.

1829 – ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்த வங்காளத்தில் உடன்கட்டை ஏறல் முறையை ஒழிக்கும் சட்டத்தை தலைமை ஆளுநர் வில்லியம் பென்டிங்கு பிரபு கொண்டு வந்தார்.

1865 – வட கரொலைனா, ஜார்ஜியா ஆகிய அமெரிக்க மாநிலங்கள் இரு வாரங்களில் அடிமைகள் அனைவரும் விடுவிக்கப்படுவர் என அறிவித்தன.

1918 – முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அரசுத்தலைவர் ஊட்ரோ வில்சன் பிரான்சு சென்றார். பதவியில் உள்ள அமெரிக்கத் தலைவர் ஒருவர் ஐரோப்பா சென்றது இதுவே முதற் தடவையாகும்.

1939 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியக் கப்பல் நெல்சன் ஸ்கொட்லாந்து கரையில் கண்ணி வெடியில் சிக்கி சேதமடைந்தது.

1943 – இரண்டாம் உலகப் போர்: யுகோசுலாவியாவின் எதிர்ப்புத் தலைவர் யோசிப் டீட்டோ 'ஜனநாயக யூகொசுலாவிய அரசு' ஒன்றை தற்காலிகமாக அமைத்தார்.

1945 – ஐக்கிய அமெரிக்கா ஐநாவில் இணைவதற்கு ஒப்புதல் அளித்து செனட் அவை வாக்களித்தது.

1957 – ஐக்கிய இராச்சியத்தில் லூவிசாம் என்னுமிடத்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில்,  92 பேர் உயிரிழந்தனர்.

1958 – பிரெஞ்சு அதிகாரத்தின் கீழ் பெனின் சுயாட்சி உரிமை பெற்றது.

1959 – ஐக்கிய அமெரிக்காவின் மேர்க்குரித் திட்டத்தின் கீழ் சாம் என்ற குரங்கு 55 மைல்கள் உயரம் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாகப் பூமி திரும்பியது.

1967 – வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்கா, மற்றும் தெற்கு வியட்நாமியப் படைகள் மேக்கொங் டெல்ட்டா பகுதியில் வியட் கொங் படைகளுடன் மோதின.

1971 – இந்தியக் கடற்படை பாக்கித்தானியக் கடற்படையையும் கராச்சியையும் தாக்கியது.

1971 – பாக்கிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான காசி என்ற நீர்மூழ்கிக் கப்பல் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது.

1971 – இந்தியாவுக்கும் பாக்கிஸ்;தானுக்கும் இடையில் ஏற்பட்ட கொந்தளிப்பான நிலைமையை ஆராய ஐ.நா பாதுகாப்பு அவை அவசரமாகக் கூடியது.

1977 – மலேசியா எயர்லைன்சு வானூர்தி 653 கடத்தப்பட்டு ஜொகூரில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 100 பேர் உயிரிழந்தனர்.

1984 – குவைத் விமானம் ஒன்றை ஹெஸ்புல்லா அமைப்பினர் கடத்தியதில் நான்கு பயணிகள் கொல்லப்பட்டனர்.

1984 – 1984 மன்னார் படுகொலைகள்: இலங்கைப் படையினர் மன்னாரில் 107-150 பொதுமக்களை படுகொலை செய்தனர்.

1991 – டெரி ஆண்டர்சன் என்ற அமெரிக்க ஊடகவியலாளர் கடத்தப்பட்டு 7 ஆண்டுகளுக்குப் பின்னர் பெய்ரூட்டில் விடுவிக்கப்பட்டார்.

1991 – ஐக்கிய அமெரிக்காவின் பான் ஆம் விமான சேவை தனது சேவைகளை நிறுத்திக் கொண்டது.

1992 – அமெரிக்கா சோமாலியாவுக்கு 28,000 அமெரிக்கப் படைவீரர்களை அனுப்ப அமெரிக்க அரசுத்தலைவர் ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ் உத்தரவிட்டார்.

2005 – ஹொங்காங்கில் பல்லாயிரக்கணக்கானோர் மக்களாட்சி வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இறப்புகள்
2015 –இலங்கை அரசியல்வாதி மசூர் மௌலானா காலமானார்.

2017 – சசி கபூர், இந்திய நடிகர் மரணம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X