2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வரலாற்றில் இன்று : டிசம்பர் 12

Editorial   / 2018 டிசெம்பர் 12 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1901 : அட்லாண்டிக் கடலூடாக முதன் முதலாக இங்கிலாந்தில் இருந்து கனடாவின் நியூபின்லாந்தில் வானொலி சமிஞ்சைகளை மார்க்கோனி பெற்றார்.

1911 : இந்தியாவின் தலைநகரம் கல்கத்தாவிலிருந்து டில்லிக்கு மாற்றப்பட்டது.

1923 : இத்தாலியில் போ ஆற்றின் அணைக்கட்டு வெடித்ததில், 600 பேர் கொல்லப்பட்டனர்.

1939 : குளிர்காலப் போர் - பின்லாந்துப் படைகள் சோவியத் படைகளை டொல்வஜார்வி என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன.

1940 : இங்கிலாந்தின் செஃபீல்ட் நகரில் உணவுவிடுதி ஒன்றின் மீது ஜேர்மனிய விமானக்கள் குண்டு வீசியதில், 70 பேர் கொல்லப்பட்டனர்.

1941 : இரண்டாம் உலகப் போர் -  பிரித்தானியா பல்கேரியாவின் மீதும், ஹங்கேரி, ருமேனியா ஆகியன ஐக்கிய அமெரிக்கா மீதும் இந்தியா, ஜப்பான் மீதும் போரை அறிவித்தன.

1941 : அமெரிக்கப் போர்க்கப்பல் வேக் தீவுக் கரைக்கப்பால் நான்கு ஜப்பானியக் கப்பல்களைத் தாக்கி மூழகடித்தது.

1941 : யூதர்களை வெளியேற்றும் திட்டத்தை அடொல்ஃப் ஹிட்லர் அறிவித்தார்.

1942 : நியூபின்லாந்தில் விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீயில், 100 பேர் கொல்லப்பட்டனர்.

1948 : மலாயா அவசரகாலம் - பத்தாங்காலி படுகொலைகள் - மலாயாவில் நிலை கொண்டிருந்த இஸ்கொட்லாந்து படையினர் 14 பேர், பத்தாங்காலி என்ற கிராமத்தில் உள்ளூர்ப் பொதுமக்கள் 24 பேரைக் கொன்று கிராமத்தைத் தீ வைத்து எரித்தனர்.

1963 , ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து கென்யா விடுதலை பெற்றது.

1979 : கொலம்பியா, எக்குவடோர் நாடுகளில் இடம்பெற்ற 8.2 ஆற அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 300 – 600 பேர் வரையில் உயிரிழந்தனர்.

1984 : மவுரித்தேனியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் முகமது கவுனா ஹைடாலா பதவி அகற்றப்பட்டு மாவோவுயா சிட்'அஹமது டாயா புதிய அதிபரானார்.

1985 : கனடாவின் நியூபின்லாந்தில் ஐக்கிய அமெரிக்காவின் 248 இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியதில், அதில் பயணஞ்செய்த அனைத்து 256 பேரும் கொல்லப்பட்டனர்.

1988 : இலண்டனில் இரண்டு ரயில்கள் மோதியதில், 35 பேர் கொல்லப்பட்டு 100 பேருக்கு மேல் காயமடைந்தனர்.

1991 : ரஸ்யா சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1997 : களுத்துறை சிறைச்சாலைப் படுகொலைகள் - இலங்கையின் களுத்துறை சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியற்கைதிகள் சிங்களக் கைதிகளினால் வெட்டிக் கொல்லப்பட்டனர்.

1950 : தென்னிந்திய நடிகர் ரஜினிகாந்த் இன் பிறந்த தினம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X