2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று : டிசம்பர் 14

Editorial   / 2018 டிசெம்பர் 14 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1965 : வசந்த், தமிழ்த் திரைப்பட இயக்குநர்/ நடிகர் பிறந்த தினம்.

1982 : சமீரா ரெட்டி,  இந்திய நடிகை பிறந்த தினம்.

1984 : ரானா தக்குபதி, இந்திய நடிகர்/ தயாரிப்பாளர் பிறந்த தினம்

1900 : குவாண்டம் இயங்கியல் - மேக்ஸ் பிளாங்க் கரும்பொருள் கதிர்வீச்சு பற்றிய தனது பிளாங்கின் விதியை நிறுவினார்.

1902 : சான் பிரான்சிஸ்கோ முதல் ஹொனலுலு வரையான முதலாவது பசிபிக் தந்திக் கம்பிகள் அமைக்கப்பட்டன.

1911 : ருவால் அமுன்சென் தலைமையிலான 5 பேரடங்கிய குழு தென் முனையை அடைந்த முதலாவது மனிதர் என்ற பெயரைப் பெற்றனர்.

1918 : பின்லாந்தின் அரசராக ஜேர்மனியின் இளவரசர் பிறீட்ரிக் கார்ல் வொன் ஹெஸ்சென் தெரிவுசெய்யப்பட்டார்.

1939 : பின்லாந்தை சோவியத் ஒன்றியம் ஆக்கிரமித்த காரணத்தால் அந்நாடு நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டது.

1940 : கலிபோர்னியா, பெர்க்லியில் புளுட்டோனியம் (Pu-238) முதல் தடவையாகப் பிரித்தெடுக்கப்பட்டது.

1941 : உக்ரைனின் கார்க்கிவ் நகரின் நாசி ஜேர்மனியத் தளபதி யூதர்கள் அனைவரும் நகரை விட்டு 2 நாள்களில் வெளியேற உத்தரவிட்டான். அடுத்த இரு நாள்களில் சுமார் 15,000 யூதர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1941 : இரண்டாம் உலகப் போர் -  ஜப்பான் தாய்லாந்துடன் கூட்டு ஒப்பந்தம் செய்து கொண்டது.

1946 : ஐநாவின் தலைமையகத்தை நியூயோர்க் நகரில் அமைக்க முடிவாகியது.

1955 : அல்பேனியா, ஆஸ்திரியா, பல்கேரியா, கம்போடியா, இலங்கை, பின்லாந்து, ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, ஜோர்தான், லாவோஸ், லிபியா, நேபாளம், போர்த்துக்கல், ருமேனியா, எஸ்ப்பானியா ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தன.

1962 : நாசாவின் மரைனர் 2 விண்கலம் வெள்ளி கோளை அண்மித்தது. இதுவே வெள்ளியை அண்மித்த முதலாவது விண்கலமாகும்.

1971 : வங்காளதேச விடுதலைப் போர் - கிழக்குப் பாக்கித்தானைச் சேர்ந்த, 200 க்கும் அதிகமான அறிவாளிகள் பாக்கிஸ்தான் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

2003 : சதாம் உசைன் கைப்பற்றப்பட்ட செய்தியை ஐக்கிய அமெரிக்காவின் அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

2003 : பாக்கிஸ்தான் அதிபர் பெர்வேஸ் முஷாரப் கொலை முயற்சி ஒன்றிலிருந்து உயிர் தப்பினார்.

2004 : தெற்கு பிரான்சில் வான் வீதி என அழைக்கப்படும் மில்லோ என்ற உலகின் மிகு உயர் பாலம் திறக்கப்பட்டது.

2012 : அமெரிக்காவின் கனெடிகட் மாநிலத்தில் சாண்டி ஹூக் தொடக்கப்பள்ளியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில், 28 பேர் கொல்லப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .