2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வரலாற்றில் இன்று: டிசம்பர் 25

S. Shivany   / 2020 டிசெம்பர் 25 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

1643 – கிறிஸ்மஸ் தீவு கண்டுபிடிக்கப்பட்டது. பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ரோயல் மேரி கப்பலின் தலைவன் வில்லியம் மைநோர்ஸ் என்பவரால் இத்தீவுக்கு கிறித்துமசுத் தீவு எனப் பெயரிடப்பட்டது.

1741 – ஆன்டர்சு செல்சியசு தனது செல்சியசு வெப்பமானியைக் கண்டுபிடித்தார்.

1776 – சியார்ச் வாசிங்டன் அமெரிக்க விடுதலைப் படையுடன் இரவோடிரவாக டெலவேர் ஆற்றைக் கடந்து டிரெண்டனில் பிரித்தானியப் படைகளுடன் போரில் ஈடுபட சென்றார்.

1831 – ஜமேக்காவில் அடிமைகள் விடுதலை வேண்டி கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

1868 – அமெரிக்க உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட அனைத்து கூட்டமைப்புப் படைவீரர்களுக்கும் பொது மன்னிப்பை அமெரிக்க அரசுத்தலைவர் ஆன்ட்ரூ ஜோன்சன் அறிவித்தார்.

1914 – முதலாம் உலகப் போர்: ஜேர்மனுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் கிறிஸ்மஸ் நாள் போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.

1932 – சீனாவின் கான்சு நகரில் 7.6 நிலநடுக்கம் ஏற்பட்டதில் 275 பேர் இறந்தனர்.

1941 – இரண்டாம் உலகப் போர்: ஆங்காங் மீதான ஜப்பானின் முற்றுகை ஆரம்பமாயிற்று.

1947 – சீனக் குடியரசின் அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது.

1962 – சோவியத் ஒன்றியம் கடைசித் தடவையாக நிலத்திற்கு மேலான அணுவாயுத சோதனையை மேற்கொண்டது.

1968 – கீழ்வெண்மணிப் படுகொலைகள்: கூலி அதிகம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 44 தலித் மக்கள் தமிழ்நாட்டில் கீழவெண்மணி கிராமத்தில் உயிருடன் தீயிட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

1977 – இஸ்ரேல் பிரதமர் பெகின் எகிப்திய அதிபர் அன்வர் சதாத்தை சந்தித்தார்.
1979 – சோவியத் ஒன்றியம் ஆப்கானித்தானில் தனது படைகளை பெருமளவில் இறக்கியது.

1989 – உருமேனியாவின் முன்னாள் கம்யூனிசத் தலைவர் நிக்கொலாய் செய்செஸ்குவுக்கும் அவரது மனைவிக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1990 – உலகளாவிய வலைத் திட்டம் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

1991 – சோவியத் தலைவர் பதவியில் இருந்து மிக்கைல் கொர்பச்சோவ் விலகினார். அடுத்த நாள் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது.

1991 – உக்ரைன் சோவியத் ஒன்றியத்தில் இருந்து விலகியது.

2003 – பெனின் விமான நிலையத்தில் போயிங் 727 விமானம் வீழ்ந்ததில் 151 பேர் உயிரிழந்தனர்.

2003 – மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலத்தில் இருந்து டிசம்பர் 19 இல் ஏவப்பட்ட பீகில் 2 விண்கலம் செவ்வாய்க் கோளில் தரையிறங்குவதற்கு சற்று முன்னர் காணாமல் போனது.

2004 – காசினி விண்கப்பலில் இருந்து சனிக் கோளின் டைட்டன் துணைக்கோளில் இறக்குவதற்காக இயூஜென்சு என்ற சேய்க்கலம் விடுவிக்கப்பட்டது. இது 2005 சனவரி 14-இல் டைட்டானில் இறங்கியது.

2005 – இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் யோசப் பரராஜசிங்கம் அதிகாலை 12:15 மணியளவில் மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்து கொண்டிருந்தபோது துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த ஒருவனால் சுட்டு கொல்லப்பட்டார்.

2012 – கசக்ஸ்தானில் அண்டோனொவ் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 27 பேர் உயிரிழந்தனர்.

2016 – உருசிய பாதுகாப்பு அமைச்சின் விமானம் ஒன்று கருங்கடலில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 92 பேரும் உயிரிழந்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .