2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வரலாற்றில் இன்று : நவம்பர் 08

Editorial   / 2018 நவம்பர் 08 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1917 : ரஷ்யாவில் அக்டோபர் புரட்சியை அடுத்து லெனின், ட்ரொட்ஸ்கி, ஸ்டாலின் ஆகியோருக்கு முழு அதிகாரமும் தரப்பட்டது.

1923 : மியூனிக் நகரில் ஹிட்லர் தலைமையில் நாசிகள் ஜேர்மனிய அரசைக் கவிழ்க்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

1938 : பாரிஸ் நகரில் ஜேர்மனிய தூதுவர் கொலை செய்யப்பட்டதை அடுத்து ஜேர்மனியிலும் ஆஸ்திரியாவிலும் யூதர்களுக்கு எதிராக வன்முறைகள் கிளம்பின.

1939 : மியூனிக் நகரில் ஹிட்லரைக் கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.

1942 : மேற்கு உக்ரேனின் தெர்னோப்பில் நகரில் நாசி ஜேர்மனியினர் 2,400 யூதர்களை பெல்செக் நகரில் இருந்த வதை முகாமுக்கு அனுப்பினர்.

1950 : கொரியப் போர் - ஐக்கிய அமெரிக்க வான்படையினர் வட கொரிய மிக் விமானங்கள் இரண்டை சுட்டு வீழ்த்தினர்.

1965 : பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் அமைக்கப்பட்டது.

1977 : கிமு 1ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க மன்னன் இரண்டாம் பிலிப் என்பவனின் சமாதி மனோலிஸ் அண்ட்ரோனிக்ஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

1987 : வடக்கு அயர்லாந்தில் பிரித்தானிய இராணுவ நினைவு நிகழ்வொன்றில் ஐரியக் குடியரசு இராணுவத்தினரின் குண்டு வெடித்ததில், 12 பேர் கொல்லப்பட்டனர்.

200:- வாகரை குண்டுத்தாக்குதல் - மட்டக்களப்பு வாகரையில் இலங்கை இராணுவத்தினர் ஏவிய பல்குழல் எறிகணை வீச்சுத் தாக்குதலில், 40 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 125 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

2006 : பாகிஸ்தானில் தர்காய் என்ற இடத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 45 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X