2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: நவம்பர் 16

Editorial   / 2017 நவம்பர் 16 , மு.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

1532: தென் அமெரிக்காவில் இன்கா சாம்ராஜ்யத்தின் கடைசி மன்னரான அதாஹூவல்பா ஸ்பானிய தளபதி பிரான்சிஸ்கா பிஸாரோவின் படைகளினால் கைது செய்யப்பட்டார்.

1943: ஜேர்மனியில் நோர்வேயினால் நிர்வகிக்கப்பட்ட மின்னுற்பத்தி நிலையமொன்றின் மீது அமெரக்க விமானங்கள் தாக்குதல் நடத்தின.

1944: ஜேர்மனியின் டுயெரென் நகரை  நேச நாடுகளின் படைகள் நிர்மூலமாக்கின.

1945: ரொக்கட் தயாரிப்பு தொழில்நுட்பத்திற்காக ஜேர்மனிய விஞ்ஞானிகள் மற்றும் பொறியிலாளர்களை அமெரிக்க இராணுவம் இரகசியமாக இணைத்துககொண்டது.

1945: யுனெஸ்கோ அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.

1965: சோவியன் யூனியனின் வெனேரா 3 விண்கலம் வெள்ளி கிரகத்தை நோக்கி ஏவப்பட்டது. மற்றொரு கிரகத்தில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் அதுவாகும்.

1988: பாகிஸ்தானில் பலவருடங்களின் பின்னர் நடைபெற்ற சுயாதீன தேர்தல் மூலம் பாகிஸ்தான் பிரதமராக பெனாஸிர் பூட்டோ முதல் தடவையாக தெரிவானார்.

1997: சீனாவில் ஜனநாயகத்திற்கான போராட்டங்களில் ஈடுபட்ட வெய் ஜிங்ஷேங்க் 18 வருடகாலம் தடுத்துவைக்கப்பட்டிருந்த பின்னர் மருத்துவ காரணங்களால் விடுவிக்கப்பட்டார்.

2000: பில் கிளின்டன், வியட்னாம் யுத்தத்தின் பின்னர் வியட்னாமிற்குச் சென்ற முதல் அமெரிக்க ஜனாதிபதியானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .