2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று: மார்ச் 01

Editorial   / 2018 மார்ச் 01 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

1562 – பிரான்சில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புரட்டஸ்தாந்தர்கள் கத்தோலிக்கர்களால் கொல்லப்பட்டதில் பிரான்சில் மதப் போர் ஆரம்பமானது.

1565 – ரியோ டி ஜெனிரோ நகரம் அமைக்கப்பட்டது.

1700 – சுவீடன் தனது புதிய நாட்காட்டியை அறிமுகப்படுத்தியது.

1811 – எகிப்திய மன்னன் முகமது அலி கடைசி மாம்லுக் அரச வம்சத்தவரைக் கொன்றான்.

1815 – இத்தாலியின் தீவான எல்பா தீவில் நாடு கடத்தப்பட்ட நிலையில் வாழ்ந்த நெப்போலியன் பொனபார்ட் பிரான்ஸ் திரும்பினான்.

1873 – முதலாவது பாவனைக்குகந்த முதலாவது தட்டச்சுப் பொறியை ஈ.ரெமிங்டன் சகோதரர்கள் நியூ யோர்க்கில் தயாரித்தனர்.

1896 – ஹென்றி பெக்கெரல் கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தார்.

1899 – இலங்கையில் குற்றவியல் தண்டனைச் சட்டவிதித் தொகுப்பு (The Ceylon Penal Code) நடைமுறைக்கு வந்தது.

1901 – இலங்கையில் நான்காவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது. மொத்த தொகையான 3,565,954 இல் யாழ்ப்பாணத்தில் 33,879 பேர் பதிவாயினர்.

1912 – முதன் முதலில் பறக்கும் விமானம் ஒன்றிலிருந்து ஆல்பர்ட் பெரி என்பவர் பெரசூட்டில் இருந்து குதித்தார்.

1936 – ஹூவர் அணைக்கட்டு கட்டிமுடிக்கப்பட்டது.

1941 – இரண்டாம் உலகப் போர்: பல்கேரியா அச்சு நாடுகள் அணியில் இணைந்தன.

1943 – இரண்டாம் உலகப் போர்: பிஸ்மார்க் கடல் போர் ஆரம்பமானது.

1949 – டச்சுக்களிடம் இருந்து யாக்யகர்த்தாவை இந்தோனேசியா கைப்பற்றியது.

1953 – ஜோசப் ஸ்டாலினுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. நான்கு நாட்களின் பின்னர் அவர் இறந்தார்.

1954 – ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் மாளிகை மீது புவேர்ட்டோ ரிக்கோ தேசியவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் காயமடைந்தனர்.

1966 – சோவியத்தின் வெனேரா 3 விண்கலம் வீனஸ் கோளில் மோதியது. வேறொரு கோளில் இறங்கிய முதலாவது விண்கலம் இதுவாகும்.

1973 – சூடானில் சவூதி அரேபியாவின் தூதரகத்தை கறுப்பு செப்டம்பர் இயக்கத்தினர் தாக்கி மூன்று வெளிநாட்டு தூதுவர்களைப் பணயக் கைதிகளாக்கினர்.

1975 – அவுஸ்திரேலியாவில் வர்ணத் தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டது.

1977 – சார்லி சப்ளினின் உடல் சுவிட்சர்லாந்தில் அவரது கல்லறையில் இருந்து திருடப்பட்டது.

1980 – சனி கோளின் ஜானுஸ் என்ற சந்திரன் இருப்பதை வோயேஜர் 1 விண்கலம் உறுதி செய்தது.

1981 – ஐரியக் குடியரசு இராணுவ உறுப்பினர் பொபி சான்ட்ஸ் வட அயர்லாந்து சிறையில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.

2002 – ஸ்பெயினில் யூரோ நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X