2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: மார்ச் 23

Editorial   / 2018 மார்ச் 23 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

1893 – இந்தியாவின் எடிசன் என்றழைக்கப்படும் தமிழக அறிவியலாளர் ஜி. டி. நாயுடு பிறந்தார்.

1903 – ரைட் சகோதரர்கள் தமது வெற்றிகரமான முதலாவது வானூர்திக்கான காப்புரிமம் பெறுவதற்கு விண்ணப்பித்தனர்.

1931 – இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களான பகத்சிங், ராஜ்குரு, சுகதேவ் ஆகியோர் ஆங்கிலேய அரசால் தூக்கிலிடப்பட்டனர்.

1942 – இரண்டாம் உலகப் போர்: இந்தியப் பெருங்கடலில், அந்தமான் தீவுகளை ஜப்பானியர் கைப்பற்றினர்.

1966 – தனது முதல் கொரில்லா தாக்குதலில் சேகுவேராவின் அணி வெற்றிகரமாக பொலிவிய இராணுவப்பிரிவை தோற்கடித்தது.

1982 – குவாத்தமாலாவின் பெர்னாண்டோ கார்சியா தலைமையிலான அரசு இராணுவப் புரட்சி ஒன்றில் கவிழ்ந்தது.

1994 – சைபீரியாவில் ரஷ்ய ஏரோபுலொட் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 75 பேர் உயிரிழந்தனர்.

1996 – தாய்வானில் முதற்தடவையாக நேரடித் தேர்தல் இடம்பெற்று லீ டெங்-ஹூய் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .