2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வரலாலற்றில் இன்று : ஜூன் 27

Editorial   / 2018 ஜூன் 27 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1941 : ருமேனியா, லாசி நகரில் யூதர்களுக்கு எதிரான படுகொலைகளை ஆரம்பித்தது. இதன் போது குறைந்தது 13,266 யூதர்கள் கொல்லப்பட்டனர்.

1950 : கொரியப் போரில் போரிட அமெரிக்கா தனது படைகளை அனுப்பத் தீர்மானித்தது.

1954 : சோவியத் ஒன்றியத்தின் முதலாவது அணு மின் நிலையம் ஓபினினிஸ்க் நகரில் திறக்கப்பட்டது.

1954 : இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாக்கப்பட்டது.

1957 : ஓடுசி சூறாவளி டெக்சஸ்–லூசியானா எல்லையைத் தாக்கியதில், 400 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

1974 : அமெரிக்கத் தலைவர் ரிச்சர்ட் நிக்சன் சோவியத் ஒன்றியத்துக்கான பயணம் மேற்கொண்டார்.

1976 : ஏர் பிரான்ஸ் 139 (டெல் அவீவ்-ஏதென்ஸ்-பாரிஸ்) பாலத்தீன விடுதலை இயக்கப் போராளிகளால் கடத்தப்பட்டு, உகண்டாவுக்குக் கொண்டு செல்லப்பட்டது.

1977 : சீபூத்தீ பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

1979 : முகமது அலி குத்துச்சண்டையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

1980 : பலெர்மோ நோக்கிச் சென்ற இத்தாலியின் ஏரோலைனீ 870 விமானம், நடுவானில் வெடித்துச் சிதறியதில் அதில் சென்ற அனைத்து 81 பேரும் உயிரிழந்தனர்.

1981 : சீனப் பொதுவுடமைக் கட்சியின் நடுவண் செயற்குழு தனது, 'மக்கள் சீனக் குடியரசு உருவாக்கப்பட்டதில் இருந்து நமது கட்சியின் வரலாறு பற்றிய சில கேள்விகள் பற்றிய தீர்மானத்தை' வெளியிட்டது. இதில் சீனப் பண்பாட்டுப் புரட்சியின் விளைவுகளுக்காக மா ஓ சே துங் மீது குற்றஞ்சாட்டியது.

1982 : கொலம்பியா விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை மேற்கொண்டது.

1988 : பாரிஸ் நகரில் இரண்டு ரயில்கள் மோதியதில் 56 பேர் கொல்லப்பட்டனர்.

1991 : சுலோவீனியா தனது விடுதலையை அறிவித்த, இரண்டாம் நாளில் யுகோஸ்லாவியா அதன் மீது படையெடுத்தது.

1998 : கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது.

2014 : ஆந்திரப் பிரதேசம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கெயில் இந்தியா நிறுவனத்தின் எரிவாயுக் குழாய் வெடித்ததில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .