2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

உலகில் வயது கூடிய தந்தை

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 17 , மு.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 96 வயதான ராம்ஜித் ரகாவ் என்ற நபர், உலகின் மிகவும் வயதான தந்தையாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரது மனைவியான சகுந்தலா தேவி, தனது 52ஆவது வயதில் இரண்டாவது குழந்தையைப் பிரசவித்துள்ளார்.

ராம்ஜித் ரகாவ், அவரது 94ஆவது வயதிலேயே முதன்முதலில் தந்தையாகியுள்ளார். தற்போது, 96 வயதை அடைந்துள்ள அவரது மனை இரண்டாவது குழந்தையையும் பிரசவித்துள்ளார்.

சகுந்தலா தேவியை 10 வருடங்களுக்கு முன்பே அவர் திருமணம் செய்துகொண்டுள்ளார். விவசாயியான அவர், தனது இளமைக் காலத்தில் சிறந்த மல்யுத்த வீரராகத் திகழ்ந்துள்ளார்.

அக்காலத்தில் அவர், அரைக் கிலோ ஆமன்ட், நல்லெண்ணெய், 3 லீற்றர் பால், சப்பாத்தி மற்றும் மரக்கறிகளையே உணவாக உட்கொண்டு வந்துள்ளார்.

இவ்வாறான உணவுகளை தான் உட்கொண்டு வந்ததாலேயே தனக்கு இவ்வளவு காலம் உயிரோடு இருக்கும் சக்தி கிடைக்கப்பெற்றுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

மதுபானம் அருந்தாத ராம்ஜித், அதிகாலையிலேயே எழுந்து தனது அன்றாட கடமைகளைச் செய்துவிட்டு இரவு எட்டு மணிக்கு நித்திரைக்குச் செல்வது வழக்கம்.

பகல் நேரங்களில் விவசாயத்தில் ஈடுபடுவதுடன் மாலையில் சுமார் ஓரிரு மணித்தியாலங்கள் உறங்குகின்றார்.  இவரது பெயர் ஹரியானா மாநிலத்திலுள்ள அரசாங்க சமூக சேவை திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவருக்கு முன்னர், ராஜஸ்தானைச் சேர்ந்த நபரொருவர் தனது 90ஆவது வயதில் தந்தையாகி சாதனை படைத்திருந்தார். ராம் ஜோகி என்ற 90 வயதான மேற்படி நபரின் மனைவி கடந்த 2007ஆம் ஆண்டு 21ஆவது குழந்தையைப் பிரசவித்தமை குறிப்பிடத்தக்கது. 



You May Also Like

  Comments - 0

  • K.Balendran Wednesday, 17 October 2012 07:56 AM

    அவரது நம்பிக்கை அது தன் பிள்ளை என்று. நம்பிக்கைதான் முக்கியம்.

    Reply : 0       0

    rima Thursday, 18 October 2012 05:17 AM

    நினைத்தால் இலங்கையிலும் சாதனை படைக்க முடியும்,

    Reply : 0       0

    mami Sunday, 21 October 2012 07:01 AM

    சுயநலவாதி .... இவன் மண்டையபோட்டல் யார் இவர்களை பார்ப்பார்கள்- ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .