2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இலங்கையில் அமைக்கப்பட்ட நத்தார் மரம் கின்னஸ் சாதனை

Editorial   / 2017 டிசெம்பர் 13 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் கடந்த வருடம் 72.1 மீற்றர் உயரத்தில் அமைக்கப்பட்ட நத்தார் மரமானது கின்னஸ் சாதனைப் படைத்துள்ளது.

அமைச்சர் அர்ஜுண ரணதுங்க துறைமுகங்கள் அமைச்சராக பதவி வகித்த போது இவரது தலைமையின் கீழ் கடந்த 2016ஆம் ஆண்டு கொழும்பு காலிமுகத்திடலில் அமைக்கபட்ட நத்தார் மரம் உலகிலேயே உயரமான நத்தார் மரமாக கின்னஸ் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது.

இது குறித்த சான்றிதலானது  உலக கின்னஸ் சாதனைக் குழுவினரால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இன்று(13) கையளிக்கப்படவுள்ளது.

இதேவேளை உலகின் மிக உயரமான  நத்தார் மரமாக கடந்த 2015ஆம் ஆண்டு சீனாவில் அமைக்கப்பட்ட 55 மீற்றர் உயரமான  நத்தார் மரம் சாதனைப் படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X