2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஏழு சிகரங்களை அடைந்து சாதனை

Editorial   / 2018 மே 18 , பி.ப. 04:36 - 1     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்டீவ் பிளெய்ன், எவரெஸ்ட் சிகரம் உள்ளிட்ட உலகில் உயரமான ஏழு சிகரங்களை, 117 நாட்களில் அடைந்து புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்டீவ் பிளெய்ன், தனது குழுவில் உள்ள இருவரோடு உலகில் உயரமான (8,848 மீற்றர்) எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை கடந்த திங்கட்கிழமை அடைந்தார்.

இதற்கு முன்பு உலகின் உயரமான ஆறு சிகரங்களை ஏறிய அவர் 7ஆவதாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார்.

117 நாட்களில் ஸ்டீவ் பிளெய்ன் இந்தப் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

ஏற்கெனவே கடந்த ஆண்டு போலந்து நாட்டைச் சேர்ந்த ஜானுஸ் கோச்சன்ஸ்கி என்பவர் 126 நாட்களில் ஏழு சிகரங்களை அடைந்து சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்தச் சாதனையை,  ஸ்டீவ் பிளெய்ன் தற்போது முறியடித்துள்ளார்.


You May Also Like

  Comments - 1

  • SHARMA THARMASEKARAN Monday, 25 June 2018 07:51 PM

    well don grade

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .