2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘13, 520 பேர் பாரிசவாதத்துக்கு சிகிச்சை பெற்றுள்ளனர்’

பைஷல் இஸ்மாயில்   / 2017 நவம்பர் 29 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிந்தவூர் தொற்றா நோய் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையில் 13, 520 பேர் பாரிசவாதத்துக்கு  சிகிச்சை பெற்றுள்ளனரென, வைத்தியசாலையின் பணிப்பாளரும் சுகாதார அமைச்சின் ஆலோசகருமான வைத்தியக் கலாநிதி கே.எல்.எம்.நக்பர் தெரிவித்தார்.

இவ்வருடம் ஜனவரி முதல் இன்று வரையான காலப்பகுதியில் 26,750 நோயாளர்கள் மொத்தமாக சிகிச்சை பெற்றுள்ளனரெனவும் அவர்களில் பாரிசவாதத்துக்கு சிகிச்சை பெற்றவர்களே அதிகமெனவும் அவர் தெரிவித்தார்.

 “உணவும் சுகாதாரமும்”என்ற தொனிப்பொருளில் நிந்தவூரில் இன்று (29) இடம்பெற்ற மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வின்போது, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இவ்வருடம் ஜனவரி மாதம் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த வைத்தியசாலைக்கு மிகக் கூடுதலான நோயாளர்கள் வருகை தந்துள்ளனர். அத்துடன், பாரிசவாத நோய்களர்கள் 95 வீதமானவர்கள் நல்ல சுகத்தையும் அடைந்துள்ளார்கள்” என்றார்.

மேலும், சீனி நோய்க்கு 6,730 பேரும் குளோஸ்ட்ரோல் நோய்க்கு 3,210 பேரும், சிறுநீர நோய்க்கு 315 பேரும், மன அழுத்தத்துக்கு 700 பேரும் ஏனைய நோய்களுக்காக 1,800 பேரும் இவ்வருடம் சிகிச்சை பெற்றுள்ளனரெனவும் இவர்களில் மிகக் கூடுதலானவர்கள் குணமடைந்துள்ளனரெனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .