2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

150 குடும்பங்களுக்கு காணி உரித்துடமை

Editorial   / 2018 ஓகஸ்ட் 14 , பி.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்  

காணியின் உரித்துடமை வழங்கும் தேசிய நிகழ்சித்திட்டத்தின் கீழ், அம்பாறை, ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று பிரதேசத்தில் வாழும் 150 குடும்பங்களுக்கான விவசாய நிலம் மற்றும் குடியேற்ற காணி உத்தரவுப் பத்திரங்களும்  காணி அளிப்புக்களும், பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனால் நேற்று (13) வழங்கப்பட்டன.

கடந்த மூன்று தலைமுறைகளாகத் தமது காணிகளுக்கு சட்ட வலுவுள்ள உத்தரவுப் பத்திரங்களோ அல்லது உறுதிகளோ  இல்லாது வாழ்ந்த குடும்பங்களுக்கே, அவர்களில் வாழ்வாதாரத்தை வளப்படுத்தும் நோக்கில், இவ்வாறு காணி உரிமை பத்திரங்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டன.

ஆலையடிவேம்பு, பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சாந்திபுரம், அளிக்கம்பை, நாவற்காடு மற்றும் அக்கரைப்பற்று  பகுதி மக்களுக்கான காணி உத்தரவுப் பத்திரங்கள 2008/4 ஆம் இலக்க சுற்றுநிருபத்தின் iiஆம் பிரிவின் கீழ் வழங்கி வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .