2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

50 வருடங்களின் பின் துப்புரவாக்கப்பட்ட மயானம்

Princiya Dixci   / 2021 மே 05 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா

அம்பாறை மாவட்டத்தின் பொத்துவிலையடுத்துள்ள சங்கமண்கண்டி மயானம் 50 வருடகால இடைவெளிக்குப்பின் இன்று (05) துப்புரவாக்கப்பட்டுள்ளது.

பொத்துவில் பிரதேசசபை உறுப்பினர் த.சுபோதரன் மேற்கொண்ட முயற்சியின் பலனாக சபையின் கனரக இயந்திரம் மற்றும் பணியாட்களைக் கொண்டு இத்துப்புரவாக்கும் பணி இடம்பெற்றது.

இதுவரைகாலமும் கல்மண் முள் பற்றைகைளுக்கு மேலால் பலத்த சிரமங்களுக்கு மத்தியில் பொதுமக்கள் சென்று பிரேதங்களை அடக்கம் செய்துவந்தனர்.

தற்போது மேற்படி மயானம் துப்புரவு செய்யப்பட்டமையால், சங்குமண்கண்டி மற்றும் மணற்சேனை கிராமங்களில் வாழும் சுமார் 200 குடும்பங்கள் நன்மையடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, அண்மையில் இங்கு வந்த பொத்துவில் பௌத்த மதகுரு தலைமையிலான குழுவினர், இங்கு புத்தர் சிலை நிறுவ முயற்சியெடுத்து, பொதுமக்களின் எதிர்ப்பால் பின்வாங்கியமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .