2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பொத்துவிலில் அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை

Editorial   / 2020 செப்டெம்பர் 23 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கார்த்திகேசு

அம்பாறை - பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையை இல்லாதொழித்து, போதைப்பொருள் பாவனையற்ற பிரதேசமாக மாற்றும் நோக்கில், விழிப்புணர் செயலமர்வொன்று, பிரதேசத்தில் இன்று (23) நடைபெற்றது.

பொத்துவில் பிரதேச செயலகத்தின் சிறுவர், மகளிர் அபிவிருத்திப் பிரிவின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.எம்.ஜனூஸ் தலைமையில், பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இந்தச் செயலமர்வு நடைபெற்றது.

இந்தச் செயலமர்வில், பொத்துவில் பிரதேச அனைத்து மதங்களின் பிரதிநிதிகள், பொத்துவில் பிரதேச தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாசீத், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.யு.அப்துல்.சமட், வட, கிழக்கு மாகாண தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுபாட்டு அதிகார சபையின் இணைப்பாளர் ஜீ.வி.எம்.ரஷாட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இங்கு உரையாற்றிய பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாசீத், போதைப்பொருள் பாவனைகளில் ஈடுபடுகின்ற நபர்களுக்கு, அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற சமுர்த்தி உள்ளிட்ட உதவிகளை வழங்காது தடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அதேவேளை, இப்பிரதேசத்தில் போதைப்பொருள்களைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் அனைத்துத் தரப்பினரும் ஒற்றுமைப்பட்டுச் செயற்படுமிடத்து, போதையை இல்லாதொழிக்க முடியுமெனவும், அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .