2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அணித்தலைவிகள் தெரிவும் நியமனம் வழங்கி வைப்பும்

பைஷல் இஸ்மாயில்   / 2017 டிசெம்பர் 27 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மக்களுக்காகவே உருவான கட்சி எனவும் ஏனைய அரசியல் கட்சிகளைப் போன்று கட்சித் தலைமையினதும், கட்சியினதும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, மக்களை முன்னிறுத்தி உருவான கட்சி அல்ல என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித்தலைவி வைத்தியர் ஹஸ்மியா உதுமாலெப்பை தெரிவித்தார்.

நடளாவிய ரீதியில் மக்கள் காங்கிரஸின் மகளிருக்கான பொதுக்கூட்டங்களை கிழக்கு மாகாணத்திலுள்ள 3 மாவட்டங்களிலும் நடத்தி வருவதாகவும் கடந்த சனிக்கிழமை முதல் இன்று வரையான (27) தினங்களில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள நிலாவெளி, குச்சவெளி, புடவைக்கட்டு, புல்மோட்டை போன்ற இடங்களில் நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து கூறுகையில்,

“அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், மக்களின் தேவைகளை இனங்காணும் கட்சியாகவும், எமது முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளைப் பெற்றுக்கொள்ளவும், கல்விக்கு முன்னுரிமை கொடுத்து, கல்வி நலத் திட்டங்களை மேம்படுத்தியும், கிராம அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்தும் வருகின்றது.

“அமைச்சர் ரிஷாட் பதியுதீனை ஒட்டுமொத்த முஸ்லிம்களின் தலைவராக நமது சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அத்துடன், நாடளாவிய ரீதியில் பரந்தளவில் எமது கட்சியின் சேவைகளைத் தொடர, நாளாந்தம் மக்களின் ஒத்துழைப்புகளும் எமக்குக் கிடைத்த வண்ணமே இருக்கின்றது” என்றார்.

இதேவேளை, நடைபெற்ற ஒவ்வொரு கூட்டத்திலும் அந்தந்த கிராமத்துக்கான மகளிர் அணித்தலைவிகள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கான நியமனக் கடிதங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .