2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘அனைத்துத் தேர்தல்களிலும் ஐ.தே.க வெற்றிபெறும்’

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2019 ஜனவரி 09 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இவ்வருடம் தேர்தல் ஆண்டாகவே அமையப் போவதாக எதிர்வு கூறிய ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளாரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினருமான யூ.கே. ஆதம்லெப்பை, நடைபெறவிருக்கின்ற அனைத்துத் தேர்தல்களிலும் ஐ.தே.க வெற்றிபெறும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் கிடையாது  என்றார்.

அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களைத் தெரிவுசெய்யும் கூட்டம், லொயிட்ஸ் வளாகத்தில் இன்று (09) இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

 அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய தேசியக் கட்சியின் பாங்காளிகளாக, அம்பாறை மவட்ட மக்களும் இணைந்துகொண்டு, எதிர்காலத்தில் அபிவிருத்தி, வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தையும் அடைந்துகொள்ள வேண்டுமென்றார்.

ஐ.தே.கவுடன் ஏனை சிறுபான்மைக் கட்சிகளும் இணைந்து, “ஐக்கிய தேசிய முன்னணி” என்ற புதியதொரு பலமிக்க அமைப்பாக எதிர்வரும் தேர்தல்களில் களமிறங்கவுள்ளதால், தமிழ், முஸ்லிம் மக்கள் அச்சமின்றி, ஐ.தே.கவுடன் இணைந்து செயற்பட முன்வர வேண்டுமென்று அவர் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன், மூவின மக்களும் வாழ்ந்து வருகின்ற பொத்துவில் தொகுதியில் மிகவும் கஷ்டப் பிரதேசங்கள், மீள்குடியேற்றக் கிராமங்கள், செய்கை பண்ண முடியாத விவசாயக் காணிகள் என தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் காணப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், இவ்வாறான பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தெரிவித்தார்.

மேலும், அமைச்சர் சஜித் பிரேமதாசவின் ஆலோசனையின் பேரில், வீடமைப்பு அதிகார சபையால் திருக்கோவிலில் அமைக்கப்பட்ட 35 வீடுகளைக் கொண்ட வீட்டுத்திட்டம், எதிர்வரும் 26ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளதாகவும் அந்நிகழ்வில் ஆதரவாளர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .