2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அபிவிருத்திகளை பூரணப்படுத்தப் பணிப்புரை

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2018 ஜூன் 26 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் 260 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில், கல்முனை மாநகரப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்திப் பணிகள் அனைத்தும், அவசரமாக நிறைவு செய்யப்பட வேண்டுமென, ஒப்பந்தகாரர்களுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டது.

குறித்த அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், மருதமுனை சமூக வள நிலையத்தில் இன்று (26 ) நடைபெற்றபோதே, இப்பணிப்புரை விடுக்கப்பட்டது.

இக்கூட்டம், நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் ஆலோசனையின் பேரில், அமைச்சின் மேலதிக செயலாளர் முஹம்மட் நபீல் முன்னிலையில், கல்முனை மாநகர மேயர் ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த அமைச்சின், 2017ஆம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டில், கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற, 21 அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பில் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

இவற்றுள் சில வேலைத்திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவுசெய்யப்பட்டுள்ளன எனவும், சில வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் திருப்திகரமாக அமைந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டதுடன், இன்னும் சில வேலைத்திட்டங்கள், மிகவும் மந்தகதியில் இடம்பெற்று வருகின்றன எனவும் விசனம் தெரிவிக்கப்பட்டது.

இவை தொடர்பில் ஒப்பந்தகாரர்களிடம் விளக்கம் கோரப்பட்டதுடன், குறித்த சில வேலைத்திட்டங்களை அடுத்த மூன்று வாரங்களில் முழுமைப்படுத்தி, மாநகர சபையிடம் கையளிக்க வேண்டுமென, அமைச்சின் மேலதிக செயலாளர் முஹம்மட் நபீல், மாநகர மேயர் ஏ.எம்.றகீப் ஆகியோரால் விடுக்கப்பட்ட பணிப்புரைக்கு, ஒப்பந்தகாரர்கள் இணக்கம் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .