2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பித்து வைப்பு

Editorial   / 2017 ஓகஸ்ட் 14 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம், ரீ.கே.றஹ்மத்துல்லா

நகரத் திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீமின் நிதியொதுக்கீட்டில் கல்குடா தொகுதியில் பல்வேறு அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் அங்குரார்ப்பண நிகழ்வு, நேற்று (13)  இடம்பெற்றது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத் தொகுதி அமைப்பாளரும் கணக்காளருமான எச்.எம்.எம்.றியாழ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம்,  பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் கணக்காளர் எச்.எம்.எம்.றியாழின் வேண்டுகோளின் பேரில், கல்குடா பிரதேசத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களுக்கு நகரத் திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சினூடாக 450 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் 85 மில்லியன் ரூபாய் செலவில்,  சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை, அமைச்சர் ரவூப் ஹக்கீம்,  சனிக்கிழமை மாலை ஆரம்பித்து வைத்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் உள்ளிட்ட அதிதிகள் கலந்துகொண்டனா்.

அனைவருக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ், 40 மில்லியன் ரூபாய் செலவில், நெய்னாகாட்டுக்கான குடிநீர் விநியோகம், நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் நிதியொதுக்கீட்டில் 30 மில்லியன் ரூபாய் செலவில் வண்டு வாய்க்கால் வீதிக்கான காபட் இடல், 15 மில்லியன் ரூபாய் செலவில்  2ஆம் கல் வீதிக்கான காபட் இடல் ஆகிய வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X