2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அம்பாறை மாவட்டத்தில் தேனீ வளர்ப்பில் மக்கள் ஆர்வம்

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2018 நவம்பர் 25 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேனீ வளர்ப்பில் அம்பாறை மாவட்ட மக்கள் அதிக ஆர்வம் செலுத்தி வருவதுடன், இத்தொழில் முயற்சியினூடக அதிக இலாபமீட்டியும் வருகின்றார்கள் என, விவசாய போதனாசிரியர் ஏ.எச்.ஏ. முபாறக் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் தேனீ வளா்ப்பை ஊக்கவிக்கும் வகையில், தேனீ வளர்ப்புப் பண்ணையாளர்களுக்கான  பயிற்சி பட்டறை, அட்டாளைச்சேனை மாவட்ட விவசாய திணைக்களத்தில் இன்று (25) நடைபெற்றது. அதில் உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இப்பயிற்சி செயலமர்வுகளில் மாவட்டத்தில் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டுள்ள, அதில் ஆர்வம் கொண்டுள்ள இளைஞர், யுவதிகள்  கலந்துகொண்டு வருகின்றமை  மாவட்டத்தில் தேனீ வளா்ப்பை மேலும் விருத்தி செய்ய முடியும் என்பதுடன், இதனை வருமானம் ஈட்டும் தொழில் துறையாகவும் மாற்றி அமைக்க முடியும் என்றார்.

சாதாரண அளவில் தேனீ வளர்ப்பில் ஈடுபடுவதன் மூலம் மாதாந்தம் 30 ஆயிரம் வரை இலாபமீட்ட முடிவதுடன், சந்தையில் தேனுக்கான கேள்வியும் அதிகம் காணப்படுவதால் இத்தொழில் மூலம் கிராமிய பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ள முடியுமெனவும் அவர், மேலும் தெரிவித்தார்.

இத்தொழில் முயற்சியாளர்களுக்கு விவசாய திணைக்களத்தால் இலவச தொழில் பயிற்சி, ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதுடன், சிறு கைத்தொழில் முயற்சி அமைச்சின் ஊடாக மானிய உதவிகள், இலகு கடன் வசதிகள் போன்றனவும் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .