2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அம்பாறை மாவட்டத்தில் புதுவகை காய்ச்சல்; ஐவர் மரணம்

நடராஜன் ஹரன்   / 2017 டிசெம்பர் 21 , பி.ப. 03:06 - 1     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கீழ்பட்ட பகுதிகளில் ஒருவகை காய்ச்சலால் பீடிக்கப்படுபவர்கள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதிவாழ் மக்களுக்கு விழிப்பூட்டும் நடவடிக்கைகள், இரவு - பகல் பாராது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

கடந்த மாத இறுதிப்பகுதியில் குறித்த காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 2 வயதுச் சிறுமியின் மரணத்தின் பின்னர் தொடர்சியாக இடம்பெற்ற 4 மரணங்களைத் தொடர்ந்து, இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது 09 நோயாளர்களுக்கு இந்த வகை காய்ச்சல் தொற்றியிருக்கக்கூடும் என சந்தேகிப்பதாகவும் இதனை “மலோடிஅசீஸ்” நோயாக இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும்,  மாவட்ட மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் பி.பேரம்பலம் தெரிவித்தார்

“சிறியவர்கள் மற்றும் முதியவர்களை தாக்கும் இந்தக் காய்ச்சலை ஆரம்பத்தில் அடையாளப்படுத்துவதன் மூலம் உயிரிழப்புகளைத் தவிர்க்கமுடியும் என்பதுடன், திருக்கோவில், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பகுதி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப்பகுதிகளில் ஒலி பெருக்கி மூலம் மக்களை விழிப்பூட்டும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன” எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 1

  • KIRUPAIRAJAH Saturday, 23 December 2017 05:25 AM

    enkay olipayrukki saththam

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .