2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புமாறு ஆளுநர் உத்தரவு

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2017 நவம்பர் 22 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிழக்கு மாகாண சபையால் வழங்கப்படவுள்ள பட்டதாரி ஆசிரியர் நியமனத்தின் போது, அக்கரைப்பற்று வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புமாறு, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம உத்தரவு பிறப்பித்துள்ளாரென, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

 

அக்கரைப்பற்று வலயத்துக்குட்பட்ட அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பொத்துவில் கோட்டப் பாடசாலைகளில் நீண்டகாலமாக நிலவிவரும் ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வு வழங்குமாறு விடுத்த கோரிக்கைக்கு அமையவே, ஆளுநரால் மேற்படி பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பாக இன்று (22) அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பழைய சுற்றுநிருபத்தின்படி, பொத்துவில் கோட்டத்தில் 115 ஆசிரியர் வெற்றிடங்களும் அக்கரைப்பற்று கோட்டத்தில் 70 வெற்றிடங்களும், அட்டாளைச்சேனை கோட்டத்தில் 90 வெற்றிடங்களுமாக அக்கரைப்பற்று வலயத்தில் மொத்தமாக 275 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக, ஆளுநரிடம் சுட்டிக்காட்டியிருந்தேன்.

“இது தொடர்பில் கவனத்தில்கொண்ட ஆளுநர், பட்டதாரி ஆசிரியர் நியமனத்தின் போது, முன்னுரிமை வழங்கி அக்கரைப்பற்று வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பிரச்சினையை தீர்ப்பதாக உறுதியளித்தார்.

“இதற்கிணங்கவே, மேற்படி கோட்டப்பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புமாறு, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு, ஆளுநர் உத்தரவிட்டார்” என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X