2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஆசிரியர்கள் பற்றாக்குறை: நிவர்த்திக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2017 ஓகஸ்ட் 14 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட அல்-பத்துர் வித்தியாலயத்தின் ஆசிரியர்கள் பற்றாக்குறையை நிவர்த்திக்கக் கோரி, அப்பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், இன்று (14) காலை ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

சுனாமியால் முற்றாக பாதிக்கப்பட்ட இப்பாடசாலை, தரம் 1 முதல் தரம் 9 வரையிலான வகுப்புக்களைக் கொண்டு 300 மாணவர்களுடன் இயங்கிவருகின்றது.

இப்பாடசாலை மிக நீண்டகாலமாக, தரம் 2, 3, 4 ஆகிய வகுப்புக்களுக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறையுடன் இயங்கி வருவதாகவும் இதனால் மாணவர்களின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெற்றோர்கள் தெரிவித்தனர்.

இப்பாடசாலைக்கான ஆசிரியர் பற்றாக்குறை, மிக விரைவில் நிவர்த்திக்கப்படுமென, அக்கரைப்பற்று கல்வி வலய அதிகாரி தெரிவித்துள்ள போதிலும் அவ்வாக்குறுதி மிக நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் ஏமாற்றப்பட்டு வருவதாகவும் அவர்கள் விசனம் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .