2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஆய்வுகூட வசதியை ஏற்படுத்துமாறு கோரிக்கை

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2019 ஜனவரி 13 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அம்பாறை, ஒலுவில் மாவட்ட வைத்தியசாலையில் மருத்துவ ஆய்வுகூட வசதியை ஏற்படுத்தித் தருமாறு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்தியத்துறை இராஜாங்க அமைச்சர் பைசால் காசிமுக்கு இன்று (13) அனுப்பி வைக்கப்பட்டுள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மத்திய மருந்தகமும் மகப்பேற்று மருத்துவமனையும் என்ற தரத்தில் இருந்த ஒலுவில் வைத்தியசாலை, 2004ஆம் ஆண்டு மாவட்ட வைத்தியசாலையாகத் தரமுயர்த்தப்பட்டது.

எனினும், இவ்வைத்தியசாலையில் நீண்ட காலமாக மருத்துவ ஆய்வு கூட வசதி இல்லாமையால் நோயாளர்களும் கற்பிணித்தாய்மார்களும் சிறுநீர், இரத்தம் போன்றவற்றைப் பரிசோதிப்பதற்காக தனியார் மருத்துவ ஆய்வு கூட நிலையங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளதாக, அம்மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் பண விரயம் ஏற்படுவதோடு, மருத்துவ அறிக்கையைப் பெறுவதில் கால தாமதம் ஏற்படுவதால், உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்படுவதாகவும் பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, மருத்துவ ஆய்வு கூட வசதியை ஏற்படுத்தி, அதற்குரிய தொழிநுட்ப உத்தியோகத்தரையும் நியமிக்குமாறும், ஈ.சீ.ஜீ தொழிநுட்பவியலாளர் ஆகியோரையும் நியமிக்குமாறும் அம்மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X