2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ஆரம்பக் கல்வி ஆசிரியர்களின் வெற்றிடங்களை நிரப்புமாறு கோரிக்கை

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 ஓகஸ்ட் 07 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிழக்கு மாகாண பாடசாலைகளில் நீண்டகாலமாக நிலவிவரும் ஆரம்பக் கல்வி ஆசிரியர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகமவிடம் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகமவுக்கு இன்று திங்கட்கிழமை (07) அவரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிழக்கு மாகாண பாடசாலைகளில் நீண்டகாலமாக நிலவிவரும் ஆரம்பக் கல்வி ஆசிரியர்களின் பற்றாக்குறையால் கிழக்கு மாகாணத்தில் ஆரம்பக் கல்வி வீழ்ச்சியடைந்த நிலையிலுள்ளது. இவ்வாறான பாரிய பிரச்சினைகளால் ஆரம்பக் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதில் பாடசாலை அதிபர்களும் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

எனவே, கிழக்கு மாகாண பாடசாலைகளில் அவசரமாக ஆரம்பக்கல்வி ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேசிய பாடசாலை சேவையிலிருந்து மாகாண அரச சேவைக்கான ஆசிரியர் இடமாற்றம் கோரி விடுவிக்கப்பட்ட ஆசிரியர்களை, கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆரம்பக் கல்வி ஆசிரியர் வெற்றிடங்களுக்கு நியமிக்குமாறும், அம் மஜகரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X