2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஆலையடிவேம்பில் தீவிர பரிசோதனை

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2018 மார்ச் 20 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அண்மையில் ஏற்பட்ட திடீர் சுகயீனங்கள், மரணங்கள் தொடர்பான காரணங்களை கண்டறிவதற்காகத் தீவிர பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக, ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.இஸ்மாயில் தெரிவித்தர்.

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கடந்த சில மாதங்களாக பக்ரீரியாக்களின் தாக்கம் காரணமாக சிறுவர்கள், வயோதிபர்கள் எனப் பலருக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டதுடன், சிலர் உயிரிழந்த சம்பவங்களும் ஏற்பட்டிருந்தன.

ஆரம்ப கட்ட ஊகங்களின் அடிப்படையில், குறித்த சம்பவங்கள் நடைபெற்ற பிரதேசங்களின் மண்ணிலிருந்தே இந்நோய் ஏற்பட்டிருக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் ஜெயமாலா ஜெயசிங்க தலைமையிலான சுகாதார துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குறித்த சம்பவம் இடம்பெற்ற பிரதேசங்களுக்கு, கடந்த வாரம் சென்று, மண் மாதிரியைப் பரிசோதனைக்காக எடுத்து அனுப்பி வைத்துள்ளனர்.

தாழ்ந்த பிரதேசங்களில் குடியிருப்பு நிலங்களை அமைப்பதற்காக, மயானப் பிரதேசங்களை அண்டிய பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட மண்ணிலிருந்து இந்த பக்ரீரியா ஏற்பட்டிருக்கலாமெனச் சந்தேகிக்கப்படுகின்றது.

அத்துடன், மழை குறைவான காரணத்தால் நிலம் அதிக வெப்பமடைந்த நிலையில், பக்ரீரியாவின் தாக்கம் குறைவடைந்து, தொடரான மழையின் பின்னர் இந்த பக்ரீயாவின் தாக்கம் அதிகரித்து, திடீர்த் தாக்கத்தை ஏற்படுத்துவதற்குமான சூழ்நிலை தென்படுவதாகவும் ஊகம் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சேற்று நிலம், மபுளுதி மண்களில் வேலை செய்பவர்கள் மற்றும் விளையாட்டில் ஈடும் படும் சிறுவர்கள் முன்னெச்சரிக்கையுடனும் அவதானத்துடனும் செயற்பட வேண்டுமென, பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .