2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இயந்திரம் கையளிப்பு

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2018 மே 06 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

திண்மக் கழிவகற்றலை இலகுபடுத்தும் பொருட்டு, கல்முனை மாநகர சபையின் மீள்சுழற்சி நிலையத்துக்கு பிளாஸ்டிக் அரிப்பு இயந்திரம் ஒன்று, கிழக்கு மாகாண சபை உள்ளூராட்சித் திணைக்களத்தால் இன்று (06) வழங்கி வைக்கப்பட்டது.
இதன் பயன்பாட்டால், கல்முனை மாநகர சபை எதிர்நோக்கி வருகின்ற திண்மக் கழிவகற்றல் பிரச்சினையை ஓரளவு குறைக்க முடியும் என, ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்தார்.
அத்துடன், எதிர்காலங்களில் பிளாஸ்டிக் பாகங்களை பொதுமக்களிடம் இருந்து விலைக்கு வாங்குவதற்கும், அவற்றை இவ்வியந்திரத்தின் மூலம் பிளாஸ்டிக் தூள்களாகப் பொதிசெய்து சந்தைப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X