2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இறக்காமம் குளக்கரைக் காணிக்குள் சட்டவிரோதமாக நிர்மாணப் பணிகள்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 மே 06 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறக்காமம் குளக்கரைக் காணியில், அத்துமீறி சட்டவிரோதமாக நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருகின்றன என, பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதனால், குளக்கரையோரத்தில் தங்கள் தோணிகளை நிறுத்த முடியாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இறக்காமம் குளத்தை நம்பி, சுமார் 1,500க்கும் மேற்பட்ட மீனவர்கள் நன்னீர் மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு வருவதுடன், இக்குளத்து நீரைப் பயன்படுத்தி இறக்காமம் ஓட்டுத் தொழிற்சாலையும் செயற்பட்டு வருகின்றது.


எனினும், கடந்த சில காலங்களாக, குளக்கரை​யை அண்டி வாழ்வோர் கரையோரக் காணிகளை அடாத்தாகக் கைப்பற்றி, சுற்று மதில்கலையும் மனைத் தொகுதிகளையும் நிர்மாணிப்பதுடன், கணிசமான கரையோரக் காணிகளை, மண் போட்டு நிரப்பி நெற்செய்கைக்காகவும் பயன்படுத்துகின்றனர் எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இதனால், குளத்தின் விசாலம் குறைந்து, நீர் மட்டம் உயர்ந்து காணப்படுகிறது என, மீனவ அமைப்புகள் குறிப்பிடுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X