2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இளைஞரின் மரணம் தொடர்பில் விசாரணை

Editorial   / 2017 ஒக்டோபர் 15 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா, ரீ.கே.றஹ்மத்துல்லா

துரிதமாக முறையான சிகிச்சை வழங்கப்படாதாதன் காரணமாக இளைஞரொருவர் உயிரிழந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்படுமென, அம்பாறை, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எப். றஹ்மான் உறுதியளித்துள்ளார்.

கடந்த 12ஆம் திகதி, கல்முனையில் இடம்பெற்ற கத்திக்குத்துக்கு இலக்காகிய நிலையில், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கல்முனைக்குடியைச் சேர்ந்த எம்.ஐ.எம்.ஸாஹீர் எனும் இளைஞனே உயிரிழந்தவாரார்.

குறித்த இளைஞரின் மரணம் வைத்தியசாலையின் அசமந்தப்போக்கு காரணமாகவே சம்பவித்ததாகத் தெரிவித்து சனிக்கிழமை இரவு வைத்தியசாலை முன்பாக இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, வைத்தியசாலை நிர்வாகத்தின் மீதும் வைத்தியர்கள் மீதும் ஆர்பாட்டக்காரர்களால் பலத்த கண்டனம் வெளியிடப்பட்டதுடன், கடமையில் இருந்த வைத்தியர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு, கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இச்சந்தர்ப்பத்தில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டிருந்த இளைஞர்களின் பிரதிநிதிகளுடன் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எப்.ரஹ்மான், பொலிஸாரின் தலையீட்டுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதுடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னிலையில் தோன்றி, குறித்த மரணம் தொடர்பில் எழுத்துமூல முறைப்பாடு ஒன்றை தரும் பட்சத்தில் அது தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.

இந்த உறுதிமொழியைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .