2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

உரமானியக் கொடுப்பனவு வழங்க நடவடிக்கை

Editorial   / 2017 நவம்பர் 24 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பைஷல் இஸ்மாயில் 

அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக விவசாயச்செய்கைக்கான அரச உர மானியக்கொடுப்பனவை வழங்குவதற்கான நடவடிக்கைகளை, விவசாய அமைச்சு மேற்கொண்டுவருவதாக, காரைதீவுப் பிரதேச கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் மார்க்கண்டு சிதம்பரநாதன், இன்று (24) தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“காரைதீவு கமநல கேந்திர நிலையத்துக்குட்பட்ட நான்கு கண்டங்களிலுள்ள 1079 எக்கர் (4316 ஹெக்ரேயர்) விவசாயக்காணிகளுக்கான உரமானியக் கொடுப்பனவாக, 54 இலட்சத்து 13 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது.

“இதன்மூலம் 353 விவசாயிகள் நன்மையடையவுள்ளனர்.

“இவர்களுக்கான உரமானியக் கொடுப்பனவு, மக்கள் வங்கியினூடாக 191 விவசாயிகளுக்கு 298,7500  ரூபாவும் இலங்கை வங்கியினுடாக 127 விவசாயிகளுக்கு 1875,500   ரூபாவும், பிரதேச அபிவிருத்தி வங்கியினுடாக 29 விவசாயிகளுக்கு 443,750 ரூபாயும், தேசிய சேமிப்பு வங்கியினூடாக 6 விவசாயிகளுக்கு 106,250  ரூபாயும் விரைவில் வழங்கப்படவுள்ளது” என அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .