2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

எட்டு எருமை மாடுகள் மீட்பு

Editorial   / 2018 ஏப்ரல் 24 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

அநுராதபுரம் - மொறவௌ பிரதேசத்திலிருந்து அம்பாறை மாவட்டம் நற்பிட்டிமுனை பகுதிக்கு சிறிய ரக லொறியில் கொண்டு செல்லப்பட்ட எட்டு எருமை மாடுகளை, ஏறாவூர் பொலிஸார் இன்று (24)  கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது, லொறி சாரதியும் அதன் நடத்துனரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களை, மிருகங்களுக்கு வதையூட்டிய குற்றச்சாட்டின் கீழ், இவர்களை நீதிமன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக, ஏறாவூர் பொலிஸ் நிலைய போதைவஸ்து தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி எம்.பீ.ஜீ.ஜீ.எஸ். சத்துரங்க தெரிவித்தார்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றையடுத்து, திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியினூடாகச் சென்று கொண்டிருந்த லொறியை, ஏறாவூர் பிரதேசத்தில் வழிமறித்து சோதனையிடப்பட்டபோதே, அந்த லொறியில், நான்கு ஆண் எருமை மாடுகளும் நான்கு பெண் எருமை மாடுகளும் அடைத்துக்கொண்டு சென்றமை கண்டறியப்பட்டது.

இந்த மாடுகள், சுவாசிக்க முடியாத நிலையில் நெரிசலாக அடைக்கப்பட்டு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .