2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

எலிக்காய்ச்சல் அபாயம்; விவசாயிகளுக்கு எச்சரிக்கை

Editorial   / 2019 ஒக்டோபர் 24 , பி.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்ஹர் இப்றாஹிம்

 

தற்போது பெய்து வரும் அடைமழை காரணமாக அம்பாறை,மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் விவசாயிகள் பெரும் போக வேளாண்மைச் செய்கையில்   ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இதேவேளை,இக்காலக் கட்டத்தில் விவசாயிகளுக்கு எலிக்காய்ச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவுள்ளதாகவும் விவசாயிகள் இவ்விடயத்தில் அவதானமாக இருக்குமாறும் சுகாதார திணைக்கள அதிகாரிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.வயல் நிலங்களில் காணப்படும் களி மற்றும் நீர் மூலமாக விவசாயிகள், விவசாய நடவடிக்கைகளிலும் குளங்களில் மீன்பிடி நடவடிக்கைகளில்  ஈடுபடும் போதும்  காயம் அல்லது துவாரங்களினூடாக ” லெப்டொஸ்பயிரா ” எனும் பக்டீரியா உட்புகுவதனாலேயே இந்த எலிக்காய்ச்சல் நோய் ஏற்படுவதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இதனால், எலிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்படுவோர் அருகிலுள்ள வைத்தியசாலை,சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம்,குடும்ப சுகாதார வைத்திய நிலையம் மற்றும் விவசாய விஸ்தரிப்பு நிலையம் என்பவற்றில் அதற்கான சிகிச்சையினையும் இலவச மருந்துகளையும் பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

எலிகளின் சிறுநீர், வயல்நிலங்களில் மற்றும் தேங்கிநிற்கும் நீர் நிலைகளில் சேர்வதனாலேயே இந்த நிலை ஏற்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .