2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘ஒக்.31க்குள் விதைப்புப் பணிகளை நிறைவுசெய்க’

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2019 செப்டெம்பர் 11 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டத்தில் 2019/2020ஆம் ஆண்டுக்கான பெரும்போக நெற்செய்கைக்கான விதைப்புப் பணிகள், ஒக்டோபர் 10ஆம் திகதி ஆரம்பித்து, 31ஆம் திகதிக்குள் நிறைவு செய்ய வேண்டுமெனத் தெரிவித்த  அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயக்கா, சேனநாயக்கா சமுத்திரத்தில் 21,760 ஏக்கர் சதுர அடி நீர் மட்டுமே தற்போது காணப்படுவதாகவும்  இந்நீரைக் கொண்டு, விவசாயிகள் கவனமாக செயற்படவேண்டுமெனவும் கூறினார்.

அக்கரைப்பற்று பிரதேச கல்லோயா வலது கரை நீர்ப்பாசனப் பிரிவுக்குட்பட்ட பெரும்போக நெற்செய்கைக்கான கூட்டம், அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (10) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கல்லோயா வலது கரை விதிவிட திட்ட முகாமையாளர் எம்.எம். நளீம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அரசாங்க அதிபர் பண்டாரநாயக்கா தொடர்ந்து உரையாற்றுகையில், அக்கரைப்பற்று பிரதேசத்தில் கடந்த சிறுபோகத்தில் செய்கை பண்ணப்பட்ட நெற்செய்கை நீர்ப்பற்றாக்குறை காரணமாக கைவிடப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு பெரும் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் சேனநாயக்கா சமுத்திரத்தில்  ஒரு இலட்சம் ஏக்கர் சதுர அடி நீர் குறைவாகக் காணப்பட்டிருந்த போதிலும், சென்ற சிறு போகத்தில் செய்கை பண்ணப்பட்ட விவசாயம் வெற்றியளித்துள்ளமை பாராட்டத்தக்கதெனவும் தெரித்தார்.

குறைந்த நீரைக் கொண்டு பல்வேறு பிரயத்தனங்களுக்கும்  மத்தியில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .