2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘ஒற்றையாட்சியை விரும்பவிலை’

எஸ்.கார்த்திகேசு   / 2018 டிசெம்பர் 31 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்நாட்டிலுள்ள தமிழ் மக்கள் தமது உரிமைக்காகப் போராடிக் கொண்டு இருக்கின்றார்கள் என்றால் நாட்டில் பௌத்த மதம் முதன்நிலை மதம் என்றும், ஒற்றையாட்சியையும் ஏற்பதற்காக அல்ல எனத் தெரிவித்த அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், இதனை ஒருபோதும் தமிழ் மக்கள் எற்கமாட்டார்கள் என்றார்.

விநாயகபுரம் மின்னொளி விளையாட்டுக் கழகத்தின் தலைவர் டி.சுரோந்திரன் தலைமையில் இடம்பெற்ற கல்வியாளர்கள், சாதணையாளர்களைக் கௌரவிக்கும் நிகழ்வில் நேற்று  (30) பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, மேற்படி அவர் தெரிவித்தார்.

கண்டிக்குச் சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பௌத்த மகாநாயக்கர்களைச் சந்தித்த யாப்புத் தொடர்பாக முன்வைத்த ஒற்றையாட்சி, பௌத்த மதத்துக்கு முன்னுரிமை என்று தெரிவிக்கப்பட்ட கருத்துக்குப் பதில் கொடுக்கும் வகையிலேயே, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், இந்த நாட்டில் வாழும் மக்களின் நலன்களை கருத்தி கொள்ளாது பேரினவாத கட்சிகள் கடந்த வாரங்களில் நடந்து கொண்டதை நாம் அனைவரும் அறிவோம் என்றும் இந்தச் செயற்பாட்டால் நாட்டுக்குப் பல கோடி ரூபாய்கள் நாசமாகியுள்ளதுடன், நாட்டு மக்கள் பல அவலங்களை எதிர்கொண்டு இருந்தனர் என்றார்.

தமிழ் மக்களது சிந்தனை செயல் எல்லாம் வட, கிழக்கில் சமஸ்டி முறையிலான சுயாட்சியைப் பெற்று நிம்மதியாக வாழ வேண்டும் என்பதே இலக்காகக் கொண்டு போராடி வருகின்றனர். அந்த ஆட்சிமுறையை வழங்க வேண்டிய நிலையில் இந்த அரசாங்கம் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X