2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கடலலைச் சறுக்கல் விளையாட்டில் பெண்களின் திறன்களை மேம்படுத்தல்

யூ.எல். மப்றூக்   / 2019 மார்ச் 06 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

“சேர்பிங்” எனப்படும் கடலலைச் சறுக்கல் விளையாட்டில், பெண் பயிற்றுவிப்பாளர்களின் திறன்களை மேம்படுத்துவதோடு, சேர்பிங் விளையாட்டில் ஈடுபடும் பெண்களுக்கான அமைப்பை வலுப்படுத்தும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு, அறுகம்பேயில் நேற்று முன்தினம் (04) நடைபெற்றது.

திறன் அபிவிருத்தி அமைச்சின் ஊடாக “அவுஸ்ரேலியன் எய்ட்”,“உள்வாங்கப்பட்ட வளர்ச்சிக்கான திறன் அபிவிருத்தி” ஆகியவற்றின் நிதியுதவிகளுடன் மேற்கொள்ளப்படும் இந்தத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில், அவுஸ்ரேலியாவின் இலங்கைக்கான பிரதி உயரிஸ்தானிகர் விக்டோரியா கோக்லே பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

இதன்போது அறுகம்பே பிரதேசத்தில் சேர்பிங் விளையாட்டில் ஈடுபடும் பெண்கள், தங்களுக்கென “அறுகம்பே விமென் சேர்ஃப் க்ளப்” எனும் பெயரில் அமைப்பொன்றை உருவாக்கியுள்ளமை குறித்த அறிமுகமும் இடம்பெற்றது.

சேர்பிங் விளையாட்டில் ஈடுபடும் பெண்கள், தங்களுக்கென இவ்வாறான அமைப்பொன்றை ஆரம்பித்துள்ளமை இலங்கையில் இதுவே முதல் தடவையாகும்.

இந்த அமைப்பு இலங்கை சேர்பிங்க சம்மேளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .