2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கனேடிய உயர்ஸ்தானிகர் அம்பாறைக்கு விஜயம்

Editorial   / 2019 மார்ச் 03 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.றமீஸ்,  ரீ.கே.றஹ்மத்துல்லா

கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கினன், அம்பாறைக்கு நல்லெண்ண விஜயமொன்றை, அண்மையில் மேற்கொண்டிருந்தார்.

உயர்ஸ்தானிக அரசியலதிகாரி கோபிநாத் பொன்னுத்துரையும் இணைந்துகொண்ட இவ்விஜயத்தின்போது, சிங்கள, தமிழ், முஸ்லிம் சிவில் சமூக செயற்பாட்டாளா்கள், பிரமுகர்களையும் சந்தித்த உயர்ஸ்தானிகர், அவர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடினார்.

பௌத்த சமய பிரமுகா்களுடன் அம்பாறை பிரிவினாவில் உரையாடிய உயர்ஸ்தானிகர், தமிழ், முஸ்லிம் பிரமுகர்களுடனான சந்திப்பை,  அம்பாறையிலுள்ள மொண்டி உல்லாச விடுதிக்  கேட்போர்கூடத்தில் நடத்தினார்.

இச்சந்திப்பில், இனங்களுக்கிடையிலான பரஸ்பர நல்லுறவு, ஐக்கியம், புரிந்துணர்வு தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டன.

ஓர் உயர்ஸ்தானிகர் தம்மைச் சந்தித்து மனம் திறந்து சிநேகபூர்வமாக உரையாடியமை இதுவே முதல் தடவையாகும் என்றும் இச்சந்தர்ப்பத்தை வழங்கிய கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினனுக்கு இரு சமூகத்தினரும் தமது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .