2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கருப்பை வாய் புற்றுநோய்: 50% பெண்கள் பாதிப்பு

Editorial   / 2017 ஓகஸ்ட் 15 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா, எம்.எஸ்.எம். ஹனீபா

இலங்கையில் வருடமொன்றுக்கு சுமார் 50 சதவீதமான பெண்கள் கருப்பை வாய் புற்றுநோய் மூலம் பாதிக்கப்படுகின்றனரெனவும் இதனால் 30 - 35 வயதுக்குட்பட்ட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனரெனவும், அட்டாளைச்சேனை  பிரதேச வைத்திய அதிகாரி ஏ.எல்.அலாவுதீன் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சு நடைமுறைப்படுத்தியுள்ள கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கு, சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் நேற்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,

“தொற்றா நோய்களில் 2ஆவது இடத்தைப்பிடித்துள்ள கருப்பை வாய் புற்றுநோயை, எச்.பி.வி எனும் வைரஸே ஏற்படுத்துகின்றது.

“ஒன்றுக்கு மேற்பட்ட பாலியல் செயற்பாடுகள் காரணமாகவும், இளவயது பாலியல் செயற்பாடுகள் மற்றும் பலவீனமான உடல் நலம், புகைப்பிடித்தல், கருத்தடைச் செயற்பாடு போன்ற காரணங்களால் இந்நோய் ஏற்படக் கூடும்.

“நோயின் அறிகுறிகளாக, உடலுறவுக்குப்பின் பிறப்புறுப்பிலிருந்து இரத்தம் கசிதல், மாதவிடாய் சுழற்சிக்கு இடையில் இரத்தப் போக்கு, இடுப்பு வலி, பாலுறவின் போது ஏற்படும் வலி என்பன  காணப்படும்.

“இப்புற்றுநோய் பாதிப்புகளில் 70 சதவீதமானவற்றைக் குணப்படுத்த முடிகின்றது. இப்புற்றுநோயைத் தடுப்பதற்காக சுகாதார அமைச்சு சுகாதார திணைக்களத்துடன் இணைந்து, நாடளாவிய ரீதியிலுள்ள பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகள் ஊடாக, எச்.பி.வி தடுப்பு மருந்து வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகின்றது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .