2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கல்முனை மாநகர சபையின் வரவு - செலவுத் திட்டம் மீண்டும் தோல்வி

Editorial   / 2019 ஜனவரி 14 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.எம்.ஷினாஸ், அஸ்லம் மௌலானா

கல்முனை மாநகர சபையின் சபையின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத்திட்ட பொழிப்பை மீள சமர்ப்பிப்தற்கான விசேட கூட்டம், மாநகர சபா மண்டபத்தில் இன்று (14) பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்றது.

இதன்போது மாநகர சபையின் மேயர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப், 2019ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் உரையாற்றினார். 

இதனைத் தொடர்ந்து இரண்டாவது தடவையாக மீண்டும்  வரவு - செலவுத் திட்டம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

இதில் வரவு - செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 16 வாக்குகளும் எதிராக 25 வாக்குகளும் அளிக்கப்பட்டதன. 08 மேலதிக வாக்குகளால் கல்முனை மாநகர சபையின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் இரண்டாவது தடவையாகவும் மீண்டும் தோல்வியுற்றது.

கடந்த மாதம் 26ஆம் திகதி, கல்முனை மாநகர சபையின் சபையின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டப் பொழிப்பை மாநகர சபை மேயர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப், சபைக்கு முன்வைத்தார். அப்போது 7 மேலதிக வாக்குகளால் 2019ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம்  தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் (முஸ்லிம் காங்கிர்ஸ் கட்சியின் பட்டியல் ) -12 பேரும் , தமிழர் விடுதலைக் கூட்டணியின்- 02 உறுப்பினர்களும், சுயேட்சை குழு சார்பாக – 02பேரும்  16 பேர் வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவளித்து வாக்களித்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் - 7 பேரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்-5 உறுப்பினர்களும், சுயேட்சைக் குழு - ( தோடம்பழச் சின்னம்) -9 பேரும், நல்லாட்சிக்கான தேசிய முன்னனி-01, தேசிய காங்கிரஸ்-01, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்(1)  தமிழர் விடுதலைக் கூட்டணி-01  என 25 பேர், வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்தனர்.

வரவு - செலவுத் திட்டத்தின் வாக்களிப்பில் சகல உறுப்பினர்களும் இன்றைய தினம் கலந்துகொண்டனார்.

2018 ஆண்டு நடைபெற்ற மாநகர சபைத் தேர்தலில் கல்முனை மாநகர சபைக்கு 41 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

வாக்கெடுப்பை தொடர்ந்து சபை முதல்வர் இரண்டு தடவைகளும் 2019ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்ட முன்மொழிவு தோல்வியுற்று அருப்பதால் 19ஆவது திருத்தச் சட்டத்தின் 2015ஏ பிரிவுக்கு அமைய, மாநகர மேயருக்கு இருக்கும் தற்துணிவு அதிகாரத்தின் பிரகாரம் 2019ஆம் நிதி ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் மக்களின் சேவை, தேவைக்கு அமைய நடைமுறைக்கு கொண்டுவரப்படுகிறது என அறிவித்து கூட்டத்தை நிறைவு செய்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .