2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கல்முனை மாநகர சுகாதார குழு கள விஜயம்

Princiya Dixci   / 2021 மே 04 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்  

அம்பாறை - கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள கல்முனை கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்துக்குப்  பின்னால் தொடர்ந்தும் திண்மக்கழிவுகள் குவிக்கப்படுவது சம்மந்தமாக மக்களால் பல தடவைகள் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, எ.ஆர். பஸீரா றியாஸ் தலைமையிலான கல்முனை மாநகர சபையின் சுகாதாரக்குழு அங்கு கள விஜயமொன்றை, இன்று (04) மேற்கொண்டது.

இந்த விஜயத்தில் கல்முனை மாநகர சபையின் சுகாதாரக்குழு உறுப்பினர்களான பீ.எம்.ஷிபான், சட்டத்தரணி என்.எம். அஸாம், நடராஜா நந்தினி மற்றும் மாநகர சபை அதிகாரிகள் மேற்பார்வை  ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டதோடு, கழிவுகளை விரைவில் அப்புறப்படுத்துவற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தனர்.

இந்தத் திண்மக்கழிவுகளின் மூலம் தூர்நாற்றம், யானைகளின் தொல்லை, கட்டாக்காலி மாடுகள், தெருநாய்களின் தொல்லை என பல்வேறு அசௌகரியங்களை கல்முனை கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் மக்கள் அனுபவித்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X