2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கல்முனைக்கு அரசியல் அதிகாரம் வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றம்

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2017 ஜூலை 31 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர், முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா ஆகியோர் பிரதிநிதித்துவப்படுத்திய கல்முனைத் தொகுதிக்கு ஐக்கிய தேசியக் கட்சியால் அரசியல் அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைக் கோரும் தீர்மானமென்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

சாய்ந்தமருது பிரதேசத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகளை விஸ்தரிப்பதற்கான விசேட கலந்துரையாடல், அக்கட்சியின் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாஸிமின் இணைப்புச் செயலாளர் ஏ.ஆர்.எம்.றிஸ்வி சுபைர் முன்னிலையில், கல்முனைத்தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ்.ஏ.றஸ்ஸாக் தலைமையில், சாய்ந்தமருது இளைஞர் நிலைய கேட்போர் கூடத்தில் நேற்று (30) இரவு நடைபெற்றது.

இதன்போதே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தற்போது ஐ.தே.க ஆட்சியில் இருக்கின்ற போதிலும் அம்பாறை மாவட்டத்தில் காலங்காலமாக அக்கட்சியின் ஆதரவாளர்களாக இருக்கின்ற அங்கத்தவர்களுக்கு எவ்வித விமோசனமும் கிடைக்கவில்லை எனவும், அவர்கள் ஏனைய கட்சிக்காரர்களால் புறந்தள்ளப்படுவதாகவும், தொழில்வாய்ப்பு மற்றும் அபிவிருத்தி பணிகளில் புறக்கணிக்கப்படுவதாகவும், ஐ.தே.க பிரமுகர்களால் இதன்போது குறிப்பிடப்பட்டது.

இப்பகுதி ஐ.தே.க உறுப்பினர்களும் ஆதரவாளர்களும், கட்சியின் தலைமைப் பீடத்தினரால் இரண்டாம்தர பிரஜைகளாக நடத்தப்படுகின்றனர் எனவும், தேர்தல் வந்தால் மட்டும் அவர்கள் இங்கு வந்து, வாக்குகளை கேட்கின்றனர் எனவும், பின்னர் அவர்கள் ஊடாக எதையும் நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் கட்சி ஆதரவாளர்கள் திண்டாடுகின்றனர் எனவும், இங்கு விசனம் தெரிவிக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர், முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா ஆகியோரின் காலத்தில் கல்முனைத் தொகுதியில் கட்சி பலப்பட்டிருந்தது போன்று, மீண்டும் கட்டியெழுப்பப்பட்ட வேண்டுமானால், அரசியல் அந்தஸ்து, அதிகாரம் என்பன வழங்கப்பட வேண்டும் எனவும், இதற்கான ஒத்துழைப்பையும் பரிந்துரையையும் கட்சியின் செயலாளர் கபீர் ஹாஸிம் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இதேவேளை, சாய்ந்தமருது பிரதேசத்தில் கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு, எதிர்வரும் 7ஆம் திகதி தொடக்கம், கிராம சேவகர் மட்டத்திலிருந்து கட்சிக்கு அங்கத்தவர்களை ஒன்றுதிரட்டுவதற்கான நடவடிக்கையை முன்னெடுப்பது எனவும், இதன்போது தீர்மானிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .