2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கல்முனையில் கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகள்

Editorial   / 2020 மார்ச் 22 , பி.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பாறுக் ஷிஹான்

கல்முனை மாநகர சபைப் பிரதேசங்களில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பது தொடர்பாக பல பிரமுகர்கள் தத்தமது கருத்துகளை வெளியிட்டனர். கல்முனை மாநகர சபைப் பிரதேசங்களில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பது தொடர்பிலான அவசர உயர்மட்டக் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) மதியம், மாநகர முதல்வர் செயலகத்தில் நடைபெற்றவேளை மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இதன்போது கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பொலிஸ், இராணுவம் மற்றும் கடற்படை உயர் அதிகாரிகள்  சுகாதார வைத்திய அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்று தத்தமது கருத்துகளை மக்கள் நலன் கருதி வெளியிட்டனர். அத்துடன் சட்டம் ஒழுங்கை இறுக்கமாக நிலைநாட்டுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் பொது மக்களையும் வர்த்தகர்களையும் அறிவுறுத்தும் வகையில் பல முக்கியத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இதன் போது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தனது கருத்தில்,

2019ஆம் ஆண்டு டிசெம்பரில் சீனாவில் தொடங்கிய இந்த வைரஸினால் மூன்று இலட்சத்து மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கொனோரா வைரஸ் என்பது பன்றி காய்ச்சல், பறவை காய்ச்சல் போன்று விரைவில் கட்டுப்படுத்த முடியவில்லை. விரைவில் பரவக்கூடிய வகையிலும் அதிக பாதிப்பைத் தரக்கூடியதாகவும் அதிக ஆபத்தாகவும்  கொரோனா வைரஸ் அமைந்துள்ளது. நீர்பீடனசக்தி குறைந்தவர்களையும் சுவாச பிரச்சினை உள்ளோரையும் விரைவில் ஆட்கொண்டு தாக்கி வருகின்றது.

கடந்த 19ஆம் திகதிக்குப் பின்னர் விமானம் சேவைகள் தடைசெய்யப்பட்ட பின்னர் நோய் தாக்கத்தின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஒன்றுகூடுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள், கைகளை முகத்தில் வைப்பதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். நோயின் அறிகுறி தென்படுவவர்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதனூடாக நோய் பரவலை தடுத்துக் கொள்ளலாம். மிகப் பிரதானமாகப் பொது மக்களின் பூரண ஒத்துழைப்புக் கிடைத்தால் விரைவில் கட்டுப்படுத்த முடியும் எனத் தெரிவித்தார்.

கல்முனை பிராந்திய பொலிஸ் பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த தனது கருத்தில்,

கல்முனை பிராந்தியம் சிறு பகுதி ஆயினும் மக்கள் அடர்த்தி கூடிய பகுதி ஆகும். இலகுவாக கொரோனா வைரஸ் ஆனது உகந்த சுகாதார நடவடிக்கையை கடைப்பிடிக்காவிட்டால் பாதிப்பை ஏற்படுத்திவிடும். அதேபோன்று அரசாங்கத்தினால் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குசட்டத்தை இங்குள்ள இளைஞர்கள், சிறுவர்கள் உதாசினம் செய்கின்றனர். அத்துடன் வீட்டுக்கு வெளியில் அநாவசியமாகக் கூடி நின்று உரையாடுவதை நிறுத்தி பொலிஸாரின் கடமைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிட்டார்.

கல்முனை மாநகர சபை உறுப்பினரும் கல்முனை மாநகர சுகாதார பணிக்குழு தவிசாருமாகிய பஸீரா ரியாஸ் தனது கருத்தில்,

கொடிய நோய் எமது பிராந்தியத்தில் பரவாமல் இருப்பதற்கு மக்களாகிய நாமே ஒத்துழைப்பு வழங்க வேண்டும் நம்மை நாமே தடுத்துக்கொள்வதன் மூலம் இந்த நோய் ஏனையவர்களுக்கும் பரவாமல் தடுத்துக்கொள்ள முடியும். குறிப்பாக பெண்கள் குழந்தைகள் மிகவும் அவதானத்துடனும் சுகாதாரத்துடன் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

கல்முனை வர்த்தக சங்கத்தின் தலைவர் கே.எம்.சித்தீக் தனது கருத்தில்,

கல்முனை மாநகர சபைப் பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தாக்கத்தை முழுமையாகத் தடுப்பதற்கான அவசர நடவடிக்கைகளை கல்முனை மாநகர மேயருடன்   இணைந்து மேற்கொண்டு வருகின்றோம்.

இதன் பிரகாரம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட அரச, தனியார் நிறுவனங்கள், பிரதான பஸ் நிலையம், சந்தைகள், வங்கிகள் மற்றும் கடற்கரை உள்ளிட்ட பொது இடங்கள் அனைத்தையும் கொரோனா வைரஸ் தொற்று நீக்கி கொண்டு சுத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவது பாராட்டத்தக்கது என குறிப்பிட்டார்.

கல்முனை பொது சந்தை செயலாளர் ஏ.எல். கபீர் தனது கருத்தில்,

நாளை கல்முனை மாநகர பொது சந்தை வாடி வீட்டு வீதி மற்றும் விகாரை வீதியின் இரு மருங்கிலும் 10 அடி  இடைவெளியில் வியாபாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். உரிய சுகாதார முறைப்படி கைகளை சுத்தப்படுத்தப்பட வேண்டும், முக கவசம் அணியப்பட வேண்டும் மீறுவோருக்கு புகார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டார்.

கல்முனை மாநகர சபை முதல்வர் தனது கருத்தில்,

கடந்த மார்ச் மாதம் 19ஆம் திகதி விமான நிலையம் மூடப்பட்டது மூலம் எமது நாட்டுக்குள் ஏனைய நாடுகளில் இருந்து நோய் தாக்கத்துக்கு உள்ளான பலர் வராமல் தடுக்கப்படுகின்றனர். எமது பிரதேசத்துக்குள் வெளிநாட்டிலிருந்து ஏறக்குறைய 145 பேருக்கு மேற்பட்டோர் வருகை தந்துள்ளனர். எமது கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்களின் துரித நடவடிக்கைகள் மூலம் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் மூலமும் மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக அனைத்து வெளிநாட்டிலிருந்து வந்தவர்களும் இனங்காணப்பட்டு அவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்வாக்கப்பட்டிருக்கின்றனர்.

அவசர கால சூழ்நிலையில் ஏற்பாடு குடும்பத்தில் ஒருவர் அத்தியாவசிய தேவைக்கு வெளியில் செல்லலாம் அவ்வாறு வழி செய்தவர் உடல் ஆரோக்கியம் உள்ளவராகவும் நோய் எதிர்ப்பு சக்தி உடையவராகவும் குறிப்பாக முழுக்க வசதிகள் போன்றவற்றை அணிந்து பாதுகாப்புடன் செல்ல வேண்டும். நாங்கள் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட வீதிகளில் பொதுச் சந்தை பேருந்து போன்ற இடங்களில் தொற்று நீக்கக்கூடிய கிருமி நாசினி தெளித்து வருகின்றோம். அதேபோன்று ஏனைய இடங்களில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை கிருமி நாசினிகளைத் தெளித்து சுகாதார நடவடிக்கைகளை எடுக்கும்.

கல்முனை பொதுச் சந்தை பகுதியில் கைகளை சுத்தப்படுத்தக்கூடிய வசதிகளைப் அடுத்து கடைகளுக்கு இடையே இடைவெளியை ஏற்படுத்தி மூன்று பேருக்கும் ஏறபடாத வகையில் வாடிக்கையாளர்களை கட்டுப்படுத்தி வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.

இந்த அவசர கால சூழ்நிலையில் அன்றாடம் ஜீவன உபாயத்தை நடத்திவரும் மக்கள் அதிகம் உள்ள இந்த பிரதேசத்தில் வியாபாரிகள் கூடிய விலைக்கு பொருள்களை விற்பனை செய்யவோ பொருள்களைப் பதுக்கி வைக்கவோ உணவகங்களில் சுகாதாரமற்ற உணவுகளை விற்பனை செய்ய முற்பட்டாலும் மக்கள் நமக்கு அறிவுறுத்தும் பட்சத்தில் அவர்களது உரிமம் இரத்து செய்யப்பட்டு எக்காலத்திலும் அவர்களுக்கான உரிமைகள் வழங்கப்பட மாட்டாது அவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தகுந்த தண்டனை வழங்கப்பட உள்ளனர் ஆணித்தரமாக கூறிக்கொள்கிறோம்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு கல்முனை மாநகர வாழ் பொது மக்கள் அனைவரும் அவசியமின்றி வெளியில் நடமாடுவதை முற்றாகத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

வீதிகள் மற்றும் பொது இடங்களில் கூடி நிற்பதை பொது மக்கள் கண்டிப்பாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். தேவையான பொருள்களை அவசரமாக கொள்வனவு செய்து கொண்டு வீடுகளுக்கு விரைந்து செல்லுங்கள். ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில் எவரும் எக்காரணம் கொண்டும் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என்பதை பொது மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்போது வீதிகளில் நடமாடுவோர் கைது செய்யப்படுவதுடன் கொரோனா பரவலுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சிலவேளை அவர்கள் கொரோனா பரிசோதனை முகாமொன்றுக்கு அனுப்பி வைக்கப்படலாம். கல்முனை மாநகர எல்லைக்குள் 05 இடங்களில் படையினரின் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு பொது மக்கள் பரிசோதனைக்குட்படுத்தப்படுவார்கள். அத்துடன் பொலிஸ் மற்றும் முப்படையினரின் கூட்டு ரோந்து நடவடிக்கைகள் இடம்பெறும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் வர்த்தகர்கள் அதிக இலாபத்தை எதிர்பார்க்காமல் அத்தியாவசிய உணவுப் பொருள்களை தட்டுப்பாடின்றியும் நியாயமான விலையிலும் விற்க வேண்டும். உணவுப் பொருள்களை கொள்ளை இலாபத்தில் விற்கும் வர்த்தகர்கள் மீதும் அவற்றை பதுக்கி வைக்கும் வர்த்தகர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இயலுமானவரை வர்த்தக நிலையங்கள் மற்றும் கடைகளுக்கு முன்னால் கைகளை கழுவுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். கல்முனை பிரதேசத்தில் தனியார் வகுப்புகள் மற்றும் முன்பள்ளிகள் நடத்துவதற்கு தடை விதித்து இருந்தோம். கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட பொது சந்தையை மூடப்பட்டது. களியாட்ட நிகழ்வுகள் திருமண நிகழ்வுகள் நடத்தப்படுவது தடுக்கப்பட்டது.

இதற்கு மேலதிகமாக நாளை காலை 6 மணியளவில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் எமது பிராந்திய எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் தொடர்ந்து வரும் நோய் தற்காப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். பிராந்திய சுகாதார பணிமனை கல்முனை வர்த்தக சங்கம் மாநகர சபையின் சுகாதார பணிக்குழு முப்படையினர் பொலிஸார் உட்பட அனைவரும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். கல்முனை சுகாதார பணிமனை மற்றும் பொலிஸார் இணைந்து மக்கள் ஒன்றுகூடும் அதனைத் தடுக்கும் வகையில் ஒலிபெருக்கி மூலம் தெளிவூட்டுவார்கள். அவசர கால சூழ்நிலையில் குடும்பத்தில் ஒருவர் வழியில் செல்லலாம் அவ்வாறு வழியில் செல்பவர் முககவசம் அணிந்து அக்குழந்தை துணியால் முகத்தை மறைத்துக் செல்ல வேண்டும். 

கல்முனை மாநகர சபை மாநகர சபை எல்லைக்குட்பட்ட விதிகள் பஸ் தரிப்பிடங்கள் பொதுச் சந்தை ஆகியவற்றில் தோற்றுவிக்கக்கூடிய கிருமிநாசினிகள் தெளிப்பார்கள். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் அரசு அலுவலகங்கள் சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் தொற்று நீக்கிகள் தெளித்து சுகாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

கல்முனை பொதுச் சந்தை வர்த்தகர்கள் மரக்கறி வகைகளை வாடிவிட்டு தொகுதி வீதி மற்றும் விகாரை வீதியிலும் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அது தவிர ஏனைய இடங்களில் விற்பனை மேற்கொள்ள முடியாது அவ்வாறு விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 

குறித்த கடைகளுக்கு இடையே குறைந்தது 10 மீற்றர் இடைவெளி இருக்க வேண்டும் என சுகாதாரத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது. கல்முனை பொதுச் சந்தை திறந்து இருக்கும் வேளையில் அங்கு வரும் மக்களின் சுகாதாரத்தைப் பேணும் வகையில் கைகளை கழுவ கூடிய வசதிகளை ஏற்படுத்தி கொள்ளப்படும் அத்தோடு மாநகர சபை நீர் தாங்கிகள் நிறுத்தப்படும். கைகளை கழுவிய பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். 

அவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும் என்பது கண்காணிக்கபடும். சந்தையின் உள்ளே மரக்கறி வியாபாரங்கள் மேற்கொள்ள முடியாது அங்கு சில்லறைக் கடைகள் மாத்திரமே இருக்கும். அதேபோல ஒரு கடைகளில் ஆகக்கூடியது 3 பேர் மாத்திரமே கூடி இருக்க முடியும்.கடைகளில் நம்மையும் பாதுகாத்து வருகின்ற வாடிக்கையாளர்களையும் பாதுகாக்க கட்டாயமாக கைகளை சுத்தப்படுத்தக்கூடிய தொற்று நீக்கிகளை வைக்க வேண்டும். 

கல்முனை மாநகரில் வருபவர்கள் தங்களது வாகனத்தை தடுத்துக்கொள்ள கல்முனை சந்தான அடிமைத்தனத்தையும் பயன்படுத்தமுடியும் அதேபோல சிறிய ரக முற்சக்கர வாகனங்கள் கல்முனை தேவாலயத்துக்கு முன்னாலுள்ள பிஸ்கால் வளவில் வாகனங்களை நிறுத்திக் கொள்ள முடியும். 

நாளை கல்முனைப் பிராந்தியத்தில் உள்ள பிரதேசங்களில் திண்மக் கழிவு அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இதன்போது ஏற்கெனவே அடையாளம் காணப்பட்ட வெளிநாடுகளிலிருந்து வருகை தந்து தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளில் திண்மைக்கழிவுகள் அகற்றப்பட மாட்டாது.

எனவே மிகவும் அபாயமிக்க உயிர்கொல்லியான கொரோனா வைரஸ் தாக்கம் வேகமாக பரவி வருகின்ற இந்த பேரிடர் சூழ்நிலையில் தம்மையும் தமது குடும்பத்தினரையும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு அரசாங்கத்தினால் அவ்வப்போது வழங்கப்படுகின்ற அறிவுறுத்தல்களை முழுமையாக கடைப்பிடித்தொழுக ஒவ்வொரு பிரஜையும் மிகப்பொறுப்புடன் முன்வர வேண்டும் என்று மேயர் ஏ.எம்.றகீப்  வேண்டுகோள் விடுத்தார்.

மேற்படி கலந்துரையாடலில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில்  இடம்பெற்றதுடன் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார் மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அர்ஷாத் காரியப்பர் பிராந்திய தொற்றுநோய் தடுப்பியலாளர் வைத்திய கலாநிதி நாகூர் ஆரிப் கல்முனை பிராந்திய பொலிஸ் பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த கல்முனை வர்த்தக சங்கத்தின் தலைவர் கே.எம்.சித்தீக் கல்முனை பொது சந்தை செயலாளர் ஏ.எல். கபீர் மாநகர சபை உறுப்பினர்களான ஆரிகா காரியப்பர் பஸீரா ரியாஸ் பிராந்திய முப்படை பிரதானிகள் சுகாதார உயர் அதிகாரிகள்  அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .