2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கல்முனையில் டெங்கு தொடர்பில் அவதானம்

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 01 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் டெங்குத் தொற்றுத் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன், ஜனவரி மாதம் 24 பேர் டெங்கு நோயாளர்களாக இணங்கானப்பட்டுள்ளனர் என, அப்பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஜீ. சுகுணன் தெரிவித்தார்.

கல்முனைப் பிரதேசத்தில் ஒருங்கினைந்த சுகாதார மேம்பாட்டு அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் ஊடாக டெங்கொழிப்பு நடவடிக்கையை சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கு சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகள் தோறும் டெங்கொழிப்பு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார

பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு குழுவினர், டெங்கொழிப்பு செயலணி, சமூக மட்ட தலைவர்கள் ஆகியோர் ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று டெங்கு நோய் தொடர்பாக மக்களுக்கு விழிப்பூட்டல் செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சம்மாந்துறை, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு ஆகிய சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகளில் அதிகமாக டெங்கு நோய் பரவக் கூடிய இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அம்பாறை மாவட்டத்தில் தற்போது பருவகால மழை பெய்யது வருவதால், டெங்கு நுளம்பு பரவக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான வெற்றுக்காணிகளை வைத்திருப்பவர்கள் இரண்டு வார காலத்துக்குள் துப்புரவு செய்ய வேண்டுமெனவும், தவறும் பட்சத்தில் சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கியுள்ள குப்பைகள், நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு இடம் கொடுக்காத வகையில் துப்புரவாக தமது இடங்களை வைத்து கொள்ளுமாறு கேட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .