2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கல்லுடைக்கும் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு ஆலோசனை

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2018 மார்ச் 05 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள தொழிலாளர்களது பாதுகாப்பு, சுகாதார நடவடிக்கைகள் மற்றும் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புத் தொடர்பான விடயங்களில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிப் பணிமனை கவனம் செலுத்தி வருவதாக, சுகாதா வைத்திய அதிகாரி ஏ.எம்.இஸ்மாயில், இன்று (05) தெரிவித்தார்.

இதற்கமைய, கண்ணகிபுரத்தில் வெடிமருந்து மூலம் மலையை உடைத்து கல் விற்பனைத் தொழிலை மேற்கொண்டுவரும் கூலி வேலையாட்களின் பாதுகாப்பு, அவர்களது சுகாதாரம் தொடர்பாக நேரில் சென்று கண்டறிப்பட்டது.

குறித்த மேற்பார்வை, பொது சுகாதார பரிசோதகர் எஸ்.மகேஸ்வரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன், அவர்களுக்கான ஆலோசனையும் வழங்கப்பட்டு வருவதாகவும் வைத்திய அதிகாரி ஏ.எம்.இஸ்மாயில் தெரிவித்தார்.

இதேவேளை, மிகவும் பின்தங்கிய கிராமங்களான அளிக்கம்பை, கண்ணகிபுரம் போன்ற இடங்களில் டெங்குத் தொற்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், மாணவர்களின் போஷாக்கு, சுகாதார மேம்பாட்டு நடவடிக்கைகள், உணவகங்கள், தேனீர் கடைகள், பலசரக்குக் கடைகளின் சுகாதாரம் பற்றிய பரிசோதனை நடவடிக்கைகளையும், ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாக, பொது சுகாதாரப் பரிசோதகர் மகேஸ்வரன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .