2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கிராம மட்டத்தில் எழும் பிரச்சினைகளை பேசி தீர்க்கும் கலந்துரையாடல்

Editorial   / 2019 செப்டெம்பர் 11 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.றமீஸ்

இனங்களிடையே ஏற்படுகின்ற முரண்பாடுகளை நீக்கி, பரஸ்பர இன நல்லுறவைக் கட்டியெழுப்புவதோடு, கிராம மட்டத்திலுள்ள மக்கள் மத்தியில் உண்டாகும் பிரச்சினைகளை பேசித் தீர்ப்பதற்காக, மத்தியஸ்த சபைகளின் பங்களிப்பை மேம்படுத்தும் வகையில், அட்டாளைச்சேனை சர்வ மதக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட செயன்முறைக் கலந்துரையாடல், அக்கரைப்பற்று மாநகர சபைக் கேட்போர் கூடத்தில் நேற்று (10) நடைபெற்றது.

அட்டாளைச்சேனை மத்தியஸ்த சபை தவிசாளரும், சர்வ மதக் குழுவின் தலைவருமான ஐ.எல்.ஹாசிம் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், திருக்கோவில், அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று ஆகிய பிரதேசங்களில் இயங்கி வரும் மத்தியஸ்த சபை தவிசாளர்கள், மத்தியஸ்த சபையில் அங்கம் வகிக்கும் பிரதிநிதிகள், பிரதேச சர்வமதக் குழு அங்கத்தவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

காலத்துக்குக் காலம் நாட்டில் ஏற்படுகின்ற பல்வேறு பிரச்சினைகள் கிராம மட்டங்களில் உருவாகும் சிறு பிரச்சினைகளில் இருந்தே எழுந்தள்ளன. இவ்வாறான பிரச்சினைகளை கிராம மட்டங்களில் பேசித் தீர்ப்பதால் பல்வேறான இழப்புக்களையும், அழிவுகளையும் இல்லாதொழித்திருக்க முடியுமென, இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .