2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘குறைந்த கெட்டவனுக்கு கூட்டமைப்பு முட்டக் கொடுத்தது’

எஸ்.கார்த்திகேசு   / 2019 செப்டெம்பர் 11 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாட்டை ஆளுகின்ற பெரும்பான்மைக் கட்சிகள் இரண்டும், தமிழர்களுக்குத் துரோகம் இழைத்தவர்கள்  என்றும் அதனைத் தான் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், அதிக கெட்டவனை விட குறைந்தளவு கெட்டவனுடன் இணைந்து செயற்படுவது என்பது காலத்தின் உசிதமான முடிவு என்பதுடன், தமிழ் மக்களுக்கு ஆரோக்கியமான விடயமாக அமையும் என்றதன் அடிப்படையிலேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, குறைந்த கெட்டவனுக்கு முட்டக் கொடுத்தது என்றும் தெரிவித்தார்.

 

அம்பாறை - திருக்கோவில், விநாயகபுரம் கோரைக்களப்பு சக்தி வித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கனிஷ்ட இடைநிலை ஆய்வுகூடத் திறப்பு விழாவில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு  தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐ.தே.க அரசாங்கத்துக்குக் கொடுத்த அழுத்தங்கள் காரணமாகவே, வடக்கு, கிழக்கிலுள்ள  75, 90 சதவீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன என்றும் அதுமட்டுமல்லாமல் கல்வி, பொருளாதாரம், வீதி அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டன என்றும் தெரிவித்தார்.

எனவே, இவ்விடயங்களைத் தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  நினைத்திருந்தால் இந்த ஆட்சியை மாற்றி இருக்கலாம். அப்படி செய்திருந்தால் இன்று யார் அட்சியில் இருந்திருப்பார்கள், தமிழ் மக்களின் நிலைமைகள் எவ்வாறு இருந்திருக்கும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.

ஊடக அடக்கு முறைகள், வெள்ளை வான் கலாசாரம் உட்பட பல அநீதிகளுக்கு இடங்கொடுக்க முடியாது என்பதன் அப்படையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதரவு வழங்கியதுடன், அதன் ஊடாக பல்வேறு துறைசார்ந்த அபிவிருத்திகள், தீர்வை நோக்கிய பயணமும் இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X