2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கொரோனா பீதி; பெருங்காயம், மஞ்சள் விலைகள் ஏற்றம்

Editorial   / 2020 மார்ச் 18 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, அம்பாறை பிராந்தியத்தில் பெருங்காயம், கட்டி மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் ஆகியனவற்றுக்குப் பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது.

பெருங்காயத்தை கையில் அல்லது வீட்டின் அறையில் கட்டிவைத்தால் கொரோனா வைரஸ் நெருங்காது என்ற பேஸ்புக் பதிவுத் தகவலினடிப்படையில் பெருங்காயத்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.  

10 ரூபாய்கு விற்கப்பட்ட ஒரு பக்கெட் பெருங்காயம், தற்போது 300ரூபாய்கும் கிடைப்பது அரிது எனப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோல், கிருமிக்கொல்லியான கட்டி மஞ்சள் இதுவரை ஒரு கிலோகிராம் 300 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 1,300ரூபாய் வரை விற்கப்படுகிறது.  தூள் பக்கெட் மஞ்சள் 50ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கஸ்தூரி மஞ்சள் 1,500 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

இந்தத் திடீர் விலையுயர்வை, விலைக் கட்டுப்பாட்டுக் குழுவினர்  கவனிப்பதில்லையா என பாவனையாளர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

இதேவேளை, விலை குறைக்கப்பட்டதென அறிவிக்கப்பட்ட ரின் மீன், பருப்பு ஆகியனவற்றையும் புதிய விலைகளில் கடைகளில் கொள்வனவு செய்வதில் பெரும் சிக்கல்களை எதிர்கொள்வதாக, பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .