2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

சுகாதாரப் பொருள்கள் வழங்கிவைப்பு

Editorial   / 2020 மே 29 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்

கொவிட் 19 ஐ கட்டுப்படுத்தும் ஜனாதிபதி செயலணி, கொவிட் 19 பதிற் செயற்பாட்டுக்கான சிவில் சமூகக் கூட்டமைப்பால் அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைவாக, அம்பாறை மாவட்டத்தில் உள்ள சிறுவர் பாதுகாப்பு, முதியோர் பராமரிப்பு இல்லங்களுக்கான சுகாதாரப் பொருள்களை வழங்கி வருவதுடன், சிறுவர் இல்லங்களைக் கண்காணித்தல், பாதுகாத்தல் நடவடிக்கையை மனித எழுச்சி நிறுவனமான எச்.இ.ஓ, யுஎஸ்எயிட் நிறுவனத்தின் உதவியுடன், மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக, ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட அம்மன் மகளிர் இல்லம், விபுலானந்தா சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் சுகாதார, சுத்தப்படுத்தல் பொருள்களை வழங்கும் நிகழ்வு, இன்று (29) நடைபெற்றது.

கொவிட் 19 பதிற்செயற்பாட்டுக்கான சிவில் சமூக கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் வி.பரமசிங்கம் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

அத்துடன், கிழக்கு மாகாண சிறுவர் நன்நடத்தை, சிறுவர் பாதுகாப்பு திணைக்கள ஆணையாளர் திருமதி றிஸ்வாணி றிபாத், சிறுவர் நன்நடத்தை மாவட்ட உத்தியோகத்தர் யு.எல்.அஸாறுடீன், மனித எழுச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் கே.நிகால் அகமட் ஆகியோரும் கலந்துகொண்டு, பொருள்களை வழங்கிவைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .