2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய மூவருக்கு விளக்கமறியல்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 டிசெம்பர் 10 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லரிச்சல் கோரக்கல் பிரதேசத்தில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவரையும், எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எச்.எல். நஸீல் உத்தரவிட்டார்.

இம்மூவரும், மொனறாகலை, புத்தளம், குருநாகல் - குளியாப்பிட்டி பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

கல்லரிச்சல் போரக்கல் வீதியில் சந்தேகத்துக்கு இடமாக மூன்று நபர்கள் நடமாடுவதாக, சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, இவர்கள் கடந்த 8ஆம் திகதி இரவு கைது செய்யப்பட்டனர்.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது, இவர்களிடம் ஆள் அடையாள அட்டை இல்லாமல் இருந்தது. இதையடுத்து, மேற்கொண்ட  மேலதிக சோதனையின் போது, நபரொருவரிடமிருந்து 02 கிராம் கேரளாக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

ஏனைய இரு நபர்களும், குருணாகல் குளியாப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர்களெனத் தெரிய வந்ததையடுத்து, குளியாப்பிட்டி பொலிஸாரிடம் இவர்கள் தொடர்பான அறிக்கையைக் கோரிய போது, இதில் ஒருவர் பல குற்றச்செயல்களுடன் சம்மந்தப்பட்டு, நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டு நீதிமன்றால் பிடியானை பிறப்பிக்கப்பட்டவரென அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர்களை, சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எச்.எல். நஸீல் முன்னிலையில் நேற்று முன்தினம் (09) ஆஜர் செய்த போது, மூவரையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், பிடியானை பிறப்பிக்கப்பட்டுள்ள நபரை, குருநாகல் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .