2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சபையை முடக்க எதிரணியினர் சூழ்ச்சி

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2018 டிசெம்பர் 03 , பி.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாநகர சபை கட்டளைகள் சட்டம் தொடர்பிலான அறிவீனம் காரணமாகவும் எமது மாநகர சபையை முடக்க வேண்டும் என்ற சூழ்ச்சியுடனுமே எதிரணியினர் சபையை குழப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்று, கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.

கல்முனை மாநகர மேயர் செயலகத்தில் இன்று (03) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இனிவரும் காலங்களில் சபையில் ஒழுக்கத்தை மீறி நடக்கும் உறுப்பினர்கள் மீது கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் இதன் நிமித்தம் அவர்களை சபையில் இருந்து குறைந்தது ஒரு மாத காலம் இடைநிறுத்துவேன் என்றும் மேயர் தெரிவித்தார்.

சிலவேளை இத மூன்று மாதங்கள் வரை நீடிக்கப்பட்டு, உறுப்புரிமையும் பறிபோகும் நிலை ஏற்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .